யன்றி நில்லாது இயல்பாயும் முடியும், ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடும் - அங்ஙனம் இயல்பாயவழித் திசைப்பெயரிறுதிக் குற்றுகரந் தன்னான் ஊரப்பட்ட மெய்யொடும் கெடும் என்றவாறு. |
உதாரணம் :வடக்கின்கண் கிழக்கின்கண் தெற்கின்கண் மேற்கின்கண் எனவும், வடக்கண் கிழக்கண் தெற்கண் மேற்கண் எனவும் வரும். இன்பெறுவழி உகரங் கெடாதென்று உணர்க. |
ஆவயினென்றதனாற் கீழ்சார் கீழ்புடை, மேல்சார் மேல்புடை, தென்சார் தென்புடை, வடசார் வடபுடை எனச் சாரியையின்றிப் பல விகாரப்பட்டு நிற்பனவுங் கொள்க. இன்னும் இதனானே கீழைக்குளம் மேலைக்குளம், கீழைச்சேரி மேலைச்சேரி என ஐகாரம் பெறுதலுங் கொள்க. |
(29) |
202. | புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் சொல்லிய வல்ல வேனைய வெல்லாந் தேருங் காலை யுருபொடு சிவணிச் சாரியை நிலையுங் கடப்பா டிலவே. |
|
இஃது இவ்வோத்தினுள் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாயதோர் புறனடை கூறுகின்றது. |
இதன் பொருள் :சொல்லிய அல்ல புள்ளியிறுதியும் உயிரிறுகிளவியும் - முற்கூறிய புள்ளியீறும் உயிரீறும் அல்லாத புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும், ஏனையவுமெல்லாம் - முற்கூறிய ஈறுகள் தம்முளொழிந்து நின்றனவுமெல்லாம், தேருங்காலை உருபொடு சிவணிச் சாரியைநிலையுங் கடப்பாடு இல - ஆராயுங்காலத்து உருபுகளோடு பொருந்திச் சாரியை நின்று முடியும் முறைமையை உடையவல்ல, நின்றும் நில்லாதும் முடியும் என்றவாறு. |
ஏனையவுமென உம்மை விரிக்க. கூறாத புள்ளியீறுகள் ஐந்து. அவை ணகர யகர ரகர லகர ளகரங்களாம். மண்ணினை மண்ணை, வேயினை வேயை, நாரினை நாரை, கல்லினை கல்லை, முள்ளினை முள்ளை என வரும். உயிரீற்றுள் ஒழிந்தது 1இகரம் ஒன்றுமேயாதலின், அதனைப் பிற் கூறினார். கிளியினை கிளியை என வரும். |
|
1. இகரவீற்றிற்குதாரணம் கிளியினை, கிளியை என்பன. |