இனித் தான் யான் அழன் புழன் என்னும் னகர ஈற்றினும் ஏழென்னும் ழகர ஈற்றினும் ஒழிந்தன பொன்னினை பொன்னை தாழினை தாழை என்றாற்போல வருவன பிறவுமாம். இனி, ஈகார ஈற்றுள் ஒழிந்தன தீயினை தீயை ஈயினை ஈயை வீயினை வீயை என்றாற்போல்வன பிறவுமாம். ஐகார ஈற்றுள் ஒழிந்தன தினையினை தினையை கழையினை கழையை என்றாற்போல்வன பிறவுமாவும். ஏனை ஈறுகளினும் வருவன உணர்ந்து கொள்க. |
1மேலே பெயரீற்றுச் செய்கையெல்லாந் தத்தம் ஈற்றின் கண் முடிப்பாராதலின் அவை ஈண்டுக் கூறல்வேண்டா. |
இனித் தேருங்காலை என்றதனானே உருபுகள் நிலைமொழியாக நின்று தம்பொருளோடு புணரும்வழி வேறுபடும் உருபீற்றுச் செய்கையெல்லாம் ஈண்டு முடித்துக்கொள்க. |
உதாரணம் :நம்பியைக் கொணர்ந்தான் மண்ணினைக் கொணர்ந்தான் கொற்றனைக் கொணர்ந்தான் என 2மூவகைப் பொருளோடுங் கூடிநின்ற உருபிற்கு ஒற்றுக் கொடுக்க. மலையொடு பொருதது, மத்திகையாற் புடைத்தான், சாத்தற்குக் கொடுத்தான், ஊர்க்குச் சென்றான், காக்கையிற்கரிது, காக்கையதுபலி, மடியுட்பழுக்காய், தடாவினுட் கொண்டான் என்னும் தொடக்கத்தன உருபுகாரணமாகப் பொருளோடு புணரும் வழி இயல்பாயும் ஈறுதிரிந்தும் ஒற்றுமிக்கும் வந்தன கொள்க. |
இனிக் கண் கால் புறம் முதலியன பெயராயும் உருபாயும் நிற்குமாதலின் அவை உருபாகக் கொள்ளும்வழி வேறுபடுஞ் செய்கைகளெல்லாம் இவ்விலேசான் முடிக்க. இஃது உருபியலாதலின் உருபொடு சிவணி என வேண்டா, அம்மிகையோனே உருபு புணர்ச்சிக்கட் சென்ற சாரியைகளெல்லாம் 3ஈற்றுப் பொருண்முடிபு உள்வழிப் பொருட் புணர்ச்சிக்குங் கொள்க. விளவின்கோடு கிளியின்கால் என எல்லா ஈற்றினுங் கொள்க. நம்பியை கொன்றனை என உயிரீறும் புள்ளியீறுஞ் சாரியைபெறாது இயல்பாய் முடிவனவும் ஈண்டே கொள்க. |
(30) |
உருபியல் முற்றிற்று. |
|
1. பெயரீறு என்றது உருபேற்கும் பெயரீற்றை. நிலைமொழியாய் நின்று உருபேற்பன பெயராதலின் பெயரீறென்றார். பெயரீறாகிய நிலைமொழியீற்றின் செய்கை ஈறுகடோறுங் கூறப்படுமென்றபடி. |
2. மூவகைப் பொருள் என்றது மூவகைப் பெயரை. அவை உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர், பொதுப்பெயர். |
3. பொருள் என்றது உருபல்லாத வருமொழியை. ஈற்றுப் பொருள் - வருமொழிப்பொருள். |