உயிர்மயங்கியல்193

தவக்கொண்டான்  வயக்களிறு  வயப்புலி  குழக்கன்று எனவும், தடஞ்செவி
கமஞ்சூல்  எனவும்,  அக்குறிது  சிறிது  தீது பெரிது எனவும் வரும். இனி,
இடைச்சொல்   வல்லொற்றுப்  பெற்று  வருவன  உளவேல்  அவற்றையும்
இவ்விலேசினான் முடித்துக் கொள்க.
 

(1)
 

204.

வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியு
மெனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியு
மாங்க வென்னு முறையசைக் கிளவியு
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே.

 

இஃது  அகர  ஈற்று  வினைச்சொல்லும்  இடைச்சொல்லும் புணருமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள் :    வினையெஞ்சு    கிளவியும்   -     வினையை
ஒழிபாகவுடைய   அகர   ஈற்று  வினைச்சொல்லும்,  உவமக்  கிளவியும் -
உவமவுருபாய் நின்ற அகர  ஈற்று  இடைச்சொல்லும், எனவென் எச்சமும் -
எனவென்னும் வாய்பாட்டால்  நின்ற அகர ஈற்று இடைச்சொல்லும், சுட்டின்
இறுதியும்  -  சுட்டாகிய  அகர  ஈற்று  இடைச்சொல்லும், ஆங்க என்னும்
உரையசைக்   கிளவியும்  -  ஆங்கவென்னும்  அகர   ஈற்று  உரையசை
யிடைச்சொல்லும், ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும் - முன்னர்க்கூறிய
வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் உண  தாவ சாவ  எனநிறுத்தி, கொண்டான் சென்றான்
தந்தான்  போயினான்    என    வல்லெழுத்துக்    கொடுத்து   முடிக்க.
இவ்வினையெச்சம்   ஒழிந்தன   எல்லாம்  இடைச்சொல்லென்று  உணர்க.
புலிபோலக்   கொன்றான்  சென்றான்   தந்தான்   போயினான்  எனவும்,
கொள்ளெனக்  கொண்டான்  சென்றான்  தந்தான்   போயினான் எனவும்,
அக்கொற்றன்   சாத்தன்  தேவன்  பூதன்  எனவும்,  ஆக்கங்கொண்டான்
சென்றான்   தந்தான்   போயினான்   'ஆங்கக்குயிலு  மயிலுங்  காட்டிக்
கேசவனை விடுத்துப் போகியோளே' எனவும் வரும்.


சிறிது    முதலிய    வினைக்குறிப்புப்     பண்போடு   முடியுமென்றபடி.
வினைக்குறிப்புப்     பண்பென்றது,    பண்படியாகப்   பிறந்த    குறிப்பு
வினைமுற்றுக்களை.