196உயிர்மயங்கியல்

உதாரணம் :  'ஆயிரு  திணையி னிசைக்குமன சொல்லே' (சொல் - 1)
'ஆயிரு   பாற்சொல்'   (சொல் - 3)   என   வரும்.  இது   1வருமொழி
வரையாது கூறலின்  வன்கணம் ஒழிந்தகணம்  எல்லாவற்றோடுஞ் சென்றது.
அவற்றிற்கு   உதாரணம்  வந்தவழிக்   காண்க.   இந்நீட்சி  இருமொழிப்
புணர்ச்சிக்கண் வருதலின் 'நீட்டும்வழி நீட்டல்' ஆகாமை உணர்க.
 

(6)
 

209.

சாவ வென்னுஞ் செயவெ னெச்சத்
திறுதி வகரங் கெடுதலு முரித்தே.

  

இது    மேல்   வினையெஞ்சுகிளவி   என்ற   எச்சத்திற்கு   எய்தாத
தெய்துவித்தது.
 

இதன் பொருள் :சாவ  என்னுஞ் செயவென் எச்சத்து இறுதி வகரம் -
சாவவென்று   சொல்லப்படுஞ்   செயவெனெச்சத்து   இறுதிக்கண்   நின்ற
அகரமும்   அதனாற்   பற்றப்பட்ட   வகரமும்,   கெடுதலும்  உரித்து  -
கெட்டுநிற்றலுங் கெடாதுநிற்றலும் உரித்து என்றவாறு.
 

உதாரணம்:கோட்டிடைச்   சாக்குத்தினான்  என   வரும்.   சீறினான்
தகர்த்தான் புடைத்தான் என ஒட்டுக. 2கெடாதது முன்னர் முடித்தாம்.
 

இதனை   'வினையெஞ்சு   கிளவி'   (எழு   -  204)   என்றதன்பின்
வையாததனான்    இயல்புகணத்தும்    இந்நிலைமொழிக்கேடு    கொள்க.
சாஞான்றான் நீண்டான் மாண்டான் யாத்தான் வீழ்த்தான் அடைந்தான் என
ஒட்டுக.
 

(7)
 

210.

அன்ன வென்னு முவமக் கிளவியு
மண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியுஞ்
செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லு
மேவல் கண்ணிய வியங்கோட் கிளவியுஞ்
செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியுஞ்

1. வருமொழி  வரையாது   கூறியதென்றது,  சூத்திரத்தில்  நீடவருதற்கு
வருமொழி வரையறை  கூறாமையை. நீட்டும் வழி நீட்டல்  ஒருமொழிக்கண்
வரும்.
 

2. முன்னர்  முடித்தாம்  என்றது, 'வினையெஞ்சு  கிளவியும்'  என்னும்
சூத்திரத்துள் முடித்தமையை.
 

(204)