200உயிர்மயங்கியல்

கெடுதலுமெனவே, கெடாது முடிதலே பெரும்பான்மையென்றவாறு.
 

வாழிகொற்றா  சாத்தா  தேவா  பூதா  என  வரும். வாழிய  என்பதே
பெரும்பான்மை. வாழிய யான் நீ அவன் அவள் அவர்  அது அவை  என
இது   மூன்றிடத்துஞ்  சேறலின் 'உயிரீ  றாகிய  முன்னிலைக்  கிளவியும்'
(எழு - 151) என்புழி முன்னிலையியல்பாம்  என்றதன்கண் அடங்காதாயிற்று.
இது குறிப்புவியங்கோள்.
 

ஒன்றென முடித்தலான் இஃது இயல்புகணத்துங்கொள்க. வாழி ஞெள்ளா
என  வரும்.   இவை   வாழ்த்தப்படும்   பொருள் வாழவேண்டுமென்னுங்
கருத்தினனாகக்    கூறுதலின்     ஏவல்கண்ணிற்றேயாம்.   அல்லாக்கால்
'வாழ்த்தியல்    வகையே    நாற்பாற்குமுரித்தே'   (செய்யுளியல்  -  109)
என்பதற்கும்   வாழ்த்தியலாகச்    சான்றோர்   கூறிய  செய்யுட்களுக்கும்
பயனின்றாமென்று உணர்க.
 

(9)
 

212.

உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்.
 

 இஃது அம்மவென்பதற்கு எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள் :   உரைப்பொருட்கிளவி    -    1எதிர்முகமாக்கும்
பொருளையுடைய  அம்மவென்னுஞ்   சொல்,   நீட்டமும்   வரையார்  -
அகரமாகி   நிற்றலேயன்றி   ஆகாரமாய்  நீண்டு   முடிதலையும்  நீக்கார்
என்றவாறு.
 

அம்மா   கொற்றா  சாத்தா   தேவா  பூதா   எனவரும். உம்மையால்
நீளாமையே   பெரும்பான்மையாம்.  வரையாது   கூறினமையின்    நீட்சி
இயல்பு கணத்துங் கொள்க.  அம்மா ஞெள்ளா  நாகா மாடா வடுகா ஆதா
என ஒட்டுக.
 

(10)

பதிப்பிலுள்ளது.  அதனுரையும்   அதற்கேற்ப  வாழுங்காலம் நெடுங்காலம்
என்று    எழுதப்பட்டுள்ளது.    ஆயின்    சி. வை. தாமோதரம்பிள்ளை
பதிப்பில்  வாழுங்காலம்  நெடுங்காலமாகுக என்று வியங்கோட்பொருள்பட
எழுதப்பட்டுளது.  சைவசித்தாந்தக்  கழகப்  பதிப்பிலும்  அங்ஙனே உளது.
ஆதலின்  சேயவென்   கிளவி   என்று   கோடலே   பொருத்தமென்பது
உற்றுநோக்கினார்க்குப்  புலப்படும்.  'வாழ்த்தியல்   வகையே   நாற்பாற்கு
முரித்தே'

  

(செ - 109).
 

1. உரையசைப் பொருளையுடைய என்றல் சிறப்பு.