213. | பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. |
|
இது முற்கூறிய பலவற்றிறுதிக்கண் சிலவற்றிற்குச் செய்யுண்முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள்: பலவற்று இறுதி நீடும் மொழி உள - பலவற்றை உணர்த்தும் ஐவகைச்சொல்லின் இறுதி அகரம் நீண்டு முடியு மொழிகளுஞ் சில உள, செய்யுள் கண்ணிய தொடர்மொழி ஆன - யாண்டுளவெனிற் செய்யுளாதலைக் கருதிய ஒன்றோடொன்று தொடர்ச்சிப்படுஞ் செய்யுண் முடிபுடைய மொழிகளின்கண் என்றவாறு. |
உடைத்தென்னாது உளவென்ற பன்மையான் வருமொழிக்கட் சில என்பது வந்து நீடுமென்று கொள்க. செய்யுளான என்னாது செய்யுள் கண்ணிய தொடர்மொழியான என்றதனாற், பல என்பதன் இறுதி அகரம் நீண்டுழி நிலைமொழி அகரப்பேறும் வருமொழி ஞகரமாகிய மெல்லெழுத்துப்பேறும், வருமொழியிறுதி நீண்டவழி அகரப்பேறும் மகரமாகிய மெல்லெழுத்துப்பேறுங் கொள்க. |
உதாரணம் : 'பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர்' ; இதன் சொன்னிலை பலசில என்னுஞ் 1செவ்வெண். |
(11) |
214. | தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாகலு முரித்தே. |
|
இது பலசில என்பனவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள்: தொடர் அல் இறுதி - தொடர்மொழியல்லாத ஈரெழுத்தொருமொழியாகிய பலசில என்னும் அகர ஈற்றுச் சொல், தம்முன் தாம்வரின் - தம்முன்னே தாம் வருமாயின், லகரம் றகரவொற்று ஆகலும் உரித்து - தம் ஈற்றினின்ற லகரவொற்று றகரவொற்றாகத் திரிந்து முடிதலும் உரித்து என்றவாறு. |
உம்மையாற் றிரியாமையும் உரித்தென்றார். |
|
1. செவ்வெண் - உம்மை தொக்கு வருவது. |