செய்யாவென்னுஞ் சூத்திரத்து உம்மையாற் பெற்ற வல்லெழுத்தினை விலக்கலின். கேண்மியா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும், உண்கா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும், உண்கா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும் இவ் விடைச்சொற்கள் முடியாமையின் எய்தாததெய்துவித்ததுமாம். உண்கா என்பது யானுண்பேனா என்னும்பொருட்டு. இயல்பு கணத்துக்கண்ணாயின் 'ஞநமயவ' (எழு - 144) என்பதனான் முடிபெய்தும். |
(22) |
225. | வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. |
|
இஃது ஆகார ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : வேற்றுமைக்கண்ணும் - ஆகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண்ணேயன்றி வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று - அகர ஈற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்துவந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :தாரா மூங்கா வங்கா என நிறுத்திக் கால் செவி தலை புறம் என வருவித்து வல்லெழுத்துக் கொடுத்து ஒட்டுக. |
(23) |
226. | குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கு மறியத் தோன்று மகரக் கிளவி. |
|
இஃது அவ் வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது, அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின். |
இதன் பொருள் :குறியதன் முன்னரும் - குற்றெழுத்தின் முன்னின்ற ஆகார ஈற்றிற்கும், ஓரெழுத்து மொழிக்கும் - ஓரெழுத் தொருமொழியாகிய ஆகார ஈற்றிற்கும், அகரக்கிளவி அறியத்தோன்றும் - நிலைமொழிக்கண் அகரமாகிய எழுத்து விளங்கத் தோன்றும் என்றவாறு. |
உதாரணம் : பலா அக்கோடு செதிள் தோல் பூ எனவும், காஅக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும். ஓரெழுத்தொருமொழி அகரம் பெறுதல் சிறுபான்மை யென்றற்கு அதனைப் பிற்கூறினார். இது நிலைமொழிச் செய்கையாதலிற் |