உயிர்மயங்கியல்209

பலா  அவிலை  பலா  அநார்  என  இயல்புகணத்துங்  கொள்க.  அறிய
என்றதனான் அவ்வகரம் ஈரிடத்தும் பொருந்தினவழிக் கொள்க.
 

இன்னும்   இதனானே   அண்ணாஅத்தேரி  திட்டாஅத்துக்குளம்  என
அத்துக்கொடுத்தும்,  உவாஅத்து   ஞான்று   கொண்டான்  என  அத்தும்
ஞான்றும்  கொடுத்தும், உவாஅத்தாற்  கொண்டான் என அத்தும்  ஆனுங்
கொடுத்தும்  1இடாஅவினுட்   கொண்டான்  என   இன்னும்  ஏழனுருபுங்
கொடுத்துஞ் செய்கைசெய்து முடிக்க.
 

இன்னும் இதனானே மூங்காவின்கால் மூங்காவின்றலை  என உருபிற்குச்
சென்ற  சாரியை  பொருட்கட்  சென்றுழி  இயைபு  வல்லெழுத்துக் கேடுங்
கொள்க.
 

(24)
 

227.

இராவென் கிளவிக் ககர மில்லை.
 

இஃது ஆகார ஈற்றுப்பெயர்க்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது.
 

இதன் பொருள்இராவென்   கிளவிக்கு  -  இராவென்னும் ஆகார
ஈற்றுச்  சொல்லிற்கு, அகரம்இல்லை  -  முற்கூறிய  அகரம்  பெறுதலின்றி
வல்லெழுத்துப்பெற்று முடியும் என்றவாறு.
 

உதாரணம் இராக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என
வரும். 2இரா அக்காக்கை இராஅக்கூத்து  எனப்  பெயரெச்சமறைப்பொருள்
தாராது  இராவிடத்துக்   காக்கை  இராவிடத்துக்  கூத்து என  வேற்றுமை
கருதியவழி இராக்காக்கை இராக்கூத்து என அகரம் பெறாதென்று உணர்க.
 

(25)
 

228.

நிலாவென் கிளவி யத்தொடு சிவணும்.
 

இஃது அகரம்  விலக்கி அதிகார வல்லெழுத்தினோடு அத்துவகுத்தலின்
எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் :நிலாவென்  கிளவி  அத்தொடு  சிவணும்  -  நிலா
வென்னுஞ் சொல் அத்துச்சாரியையோடு பொருந்தி முடியும் என்றவாறு.


1. இடாஅ - இறைகூடை.
 

2. இராஅக்காக்கை  -  இராதகாக்கை.  இராவிடத்துக்  காக்கை  எனின்
அகரம் பெறாது இராக்காக்கை என வரும். ஏனையவுமன்ன.