உதாரணம் : யாஅக்கோடு பிடாஅக்கோடு தளாஅக்கோடு செதிள் தோல் பூ என வரும். மானமில்லை என்றதனால் இம்மூன்றற்கும் உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. யாவின்கோடு பிடாவின்கோடு தளாவின்கோடு என வரும். சாரியை பெறவே அகரம் வீழ்ந்தது. |
இன்னும் இதனானே யாஅத்துக்கோடு பிடாஅத்துக்கோடு தளாஅத்துக்கோடு என அத்துப் பெறுதலுங் கொள்க, 1அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின். |
யாமரக் கிளவி யென்பதனைக் 'குறியதன் முன்னர்' (எழு - 226) என்பதன்பின் வையாதவதனான் இராவிற் கொண்டான் நிலாவிற் கொண்டான் என உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. |
(28) |
231. | மாமரக் கிளவியு மாவு மாவு மாமுப் பெயரு மவற்றோ ரன்ன வகரம் வல்லெழுத் தவையவ ணிலையா னகர மொற்று மாவு மாவும். |
|
இஃது எய்தியது விலக்கி எய்தாத தெய்துவித்தது. இம் மூன்றும் வல்லெழுத்துப் பெறா என்றலின் எய்தியது விலக்கிற்று. மாமரத்துக்கு அகரமும் ஙஞநம ஒற்றும் ஏனையவற்றிற்கு னகர ஒற்றும் எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : மாமரக் கிளவியும் ஆவும் மாவும் ஆம் முப்பெயரும் அவற்றோரன்ன - மாமரமாகிய சொல்லும் ஆவென்னுஞ் சொல்லும் மாவென்னுஞ்சொல்லுமாகிய மூன்று பெயரும் யாமரம் முதலிய மூன்றோடும் ஒருதன்மையவாய் மெல்லெழுத்துப் பெற்று முடியும். ஆவும் மாவும் அகரம் |
|
1. அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின் என்றது, யா முதலிய இவைகள் உயிர் 24-ஞ் சூத்திரத்தானே அகரமும், இச் சூத்திரத்தால் வல்லெழுத்தும் பெறுதலின், அத்துப் பெறுதலுங் கொள்க என்றபடி. என்னை ? அகரமும் வல்லெழுத்தும் பெறுவன அத்தும் பெறுமாதலின். (சூத். 24 நோக்குக.) இனி, அத்தின் முதலெழுத்தும் அகரமாதலானும், அத்து வல்லெழுத்தும் பெறுதலானும் என்பது கருத்தாகக் கொள்ளினுமாம். |