நின்ற என்றதனால் வினையெச்சத்திற்குமுன் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. |
தொன்றியதன் மருங்கின் என்றதனான் அன்றி யென்பதூஉஞ் செய்யுளில் இம்முடிவு எய்துதல் கொள்க. ' இடனன்று துறத்தல் வல்லி யோரே' வாளன்று பிடியா வன்கணாடவர்', 'நாளன்றுபோகி' (புறம் - 124) என வரும். முற்றியலிகரந்திரிந்து குற்றியலுகரமாய் நின்றது. |
(35) |
238. | சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே. |
| |
இஃது இகர ஈற்றுச் சுட்டுப்பெயர் இயல்புகணத்தோடு முடியுமாறு கூறுதலின் எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள்: சுட்டின் இயற்கை - இகர ஈற்றுச் சுட்டின் இயல்பு, முன் கிளந்தற்று - முன் அகர ஈற்றுச் சுட்டிற்குக் கூறிய தன்மைத்தாம் என்றவாறு. |
என்றது 'சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றி' (எழு - 205) என்பது முதலிய நான்கு சூத்திரத்தானுங் கூறிய இலக்கணங்களை அவை மென்கணத்து மெல்லெழுத்து மிகுதலும் இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் வகரம்பெறுதலுஞ் செய்யுட்கண் வகரங் கெட்டுச் சுட்டு நீடலுமாம். |
இஞ்ஞாண் நூல் மணி எனவும், இவ்யாழ் இவ்வட்டு எனவும், இவ்வடை இவ்வாடை இவ்விலை இவ்வீயம் இவ்வுரல் இவ்வூர்தி இவ்வெழு இவ்வேணி இவ்வையம் இவ்வொடு இவ்வோக்கம் இவ்வௌவியம் எனவும் ஈவயினான எனவும் வரும். |
1'ஈகாண் டோன்றுமெஞ் சிறுநல் லூரே' |
என்றதும், |
'கள்வனோ வல்லன் கணவனென் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே யீதொன்று' |
(சிலப். ஊர்சூழ்வரி - 7) |
என்றதும் இதுவென்னுஞ் சுட்டு முதல் உகர ஈறாதலின் அது செய்யுளகத்துப் புறனடையான் முடியுமென உணர்க. |
| (36) |
|
1. இதுகாண் என்பது ஈகாண் என்றாயிற்று. ஈது என்பதும் இது என்பதன் திரிபு. |