239. | பதக்குமுன் வரினே தூணிக் கிளவி முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே. |
|
இஃது இவ்வீற்று அல்வழிகளுள் அளவுப்பெயருள் ஒன்றற்குத் தொகைமரபினுள் எய்திய ஏயென் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள்:தூணிக் கிளவிமுன் பதக்கு வரின் - தூணியாகிய அளவுப்பெயரின் முன்னர்ப் பதக்கு என்னும் அளவுப்பெயர் வருமாயின், முதற்கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று - முன்பு விதந்தெடுத்த வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :தூணிப்பதக்கு என வரும். இஃது உம்மைத் தொகை. |
வருமொழி முற்கூறியவதனான் அடையொடு வந்துழியும் இவ் விதி கொள்க. இருதூணிப்பதக்கு முத்தூணிப்பதக்கு என ஒட்டுக. கிளந்தெடுத்த வென்றதனால் 1தூணிக்கொள் சாமை தோரை பாளிதம் எனப் பொருட்பெயர் முன் வந்துழியும், இருதூணிக்கொள் என அது தான் அடை யடுத்துழியுந், தூணித்தூணி தொடித்தொடி காணிக்காணி பூணிப்பூணி எனத் தன் முன்னர்த் தான் வந்துழியும் இவ் விதி கொள்க. |
இன்னும் இதனானே தன்முன்னர்த் தான் வந்துழியும் அது தான் அடையடுத்து வந்துழியும் இக்குச்சாரியை பெறுதலுங் கொள்க. தூணிக்குத்தூணி இருதூணிக்குத்தூணி எனவரும். இவற்றுட் பண்புத்தொகையும் உள. |
(37) |
240. | உரிவரு காலை நாழிக் கிளவி இறுதி இகர மெய்யொடுங் கெடுமே டகர மொற்று மாவயி னான. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் :உரிவரு காலை - நாழிமுன்னர் உரி வருமொழியாய் வருங்காலத்து, நாழிக் கிளவி - அந் நாழி |
|
1. தூணிக்கொள் முதலியன பண்புத்தொகை. |