218உயிர்மயங்கியல்

யென்னுஞ்   சொல்,    இறுதி    இகரம்    மெய்யொடுங்  கெடும் - தன்
இறுதியினின்ற  இகரந் தானேறிய  மெய்யொடுங் கெடும், ஆவயின் - ஆன
டகரம் ஒற்றும் - அவ்விடத்து டகரம் ஒற்றாய் வரும் என்றவாறு.
 

உதாரணம் :நாடுரி என வரும். இதனான் யகாரமும் விலக்குண்டது.
 

வருமொழி முற்கூறியவதனான் இருநாடுரி முந்நாடுரி எனவும் ஒட்டுக.
 

இறுதியிகரமென 1முன்னும் ஓர் இகரம் உள்ளதுபோலக்  கூறியவதனான்
ஈண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலைமொழியாய் நின்று பெயரோடு
வல்லெழுத்து  மிக்கு முடிதலுங்  கொள்க.  நாழிக்காயம்  உரிக்காயம் சுக்கு
தோரை பாளிதம் என வரும்.
 

(38)
 

241.

பனியென வரூஉங் கால வேற்றுமைக்
கத்து மின்னுஞ் சாரியை யாகும்.

 

இஃது இகர ஈற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தினோடு சாரியை
பெறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் : பனியென   வரூஉங்    கால   வேற்றுமைக்கு  -
பனியென்று   சொல்லவருகின்ற   நோயன்றிக்   காலத்தை    உணரநின்ற
வேற்றுமை முடிபுடைய  பெயர்க்கு, அத்தும் இன்னுஞ் சாரியை  ஆகும்  -
அத்தும் இன்னுஞ் சாரியையாக வரும் என்றவாறு.
 

உதாரணம் : பனியத்துக்கொண்டான்  பனியிற்கொண்டான்  சென்றான்
தந்தான் போயினான் என வரும்.
 

வேற்றுமை யென்றதனான் இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.
 

(39)

1. முன்னும்  ஓர் இகரம்  இருந்தாற்றான் இறுதி இகரமெனல் வேண்டும்.
அங்ஙனமின்றாகவும் கூறியதனால் என்பது கருத்து.