224உயிர்மயங்கியல்

உதாரணம் :மீக்கோள் மீப்பல் என வரும்.
 

உடனிலையென்றதனான் மீங்குழி மீந்தோல் என மெல்லெழுத்துப்பெற்று
முடிவனவுங் கொள்க.
 

(49)
 

252.

வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.
 

இஃது ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்வேற்றுமைக்கண்ணும்  அதனோரற்று   -   ஈகார
ஈற்றுப்பெயர்  வேற்றுமைப்பொருட்   புணர்ச்சிக்கண்ணும்   ஆகார  ஈற்று
அல்வழிபோல  வல்லெழுத்து  வந்துழி  அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்
என்றவாறு.
 

உதாரணம் :ஈக்கால்  சிறகு  தலை புறம்,  தீக்கடுமை சிறுமை  தீமை
பெருமை என வரும்.
 

(50)
 

253.

நீயெ னொருபெய ருருபிய னிலையு
மாவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

 

இஃது எய்தியது  விலக்கிப்  பிறிதுவிதி வகுத்தது, வல்லெழுத்து விலக்கி
னகரவொற்றே பெறுக என்றலின்.
 

இதன் பொருள் :  நீயென்   ஒருபெயர்   உருபியல்    நிலையும்  -
நீயென்னும்   ஓரெழுத்தொருமொழி   உருபு   புணர்ச்சிக்கண்  நெடுமுதல்
குறுகி னகரம் ஒற்றி நின்றாற்போல  ஈண்டுப்  பொருட் புணர்ச்சிக்கண்ணும்
முடியும்,  ஆவயின்  வல்லெழுத்து  இயற்கையாகும்  -  அவ்வாறு முடிபுழி
இயைபு வல்லெழுத்து மிகா என்றவாறு.
 

உதாரணம் :நின்கை செவி தலை புறம் என வரும்.
 

இஃது  ஈகார  ஈறு  இகர ஈறாய்  இகர  ஈறு  னகர ஈறாய் நின்றுழியும்
'நீயெனொருபெயர்'     என்றலிற்      1றிரிந்ததன்றிரிபதுவே    யாயிற்று.
இயற்கையாகுமெனவே  நிலைமொழித்  தொழில்  அதிகார  வல்லெழுத்தை
விலக்காதாயிற்று. 
 

(51)

1. இது நூன்மரபில் விளக்கப்பட்டுளது.