254. | உகர விறுதி யகர வியற்றே. |
| |
இஃது உகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் :உகர இறுதி அகர இயற்று - உகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :கடுக்குறிது சிறிது தீது பெரிது என வரும். |
(52) |
255. | சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும். |
| |
இஃது உகர ஈற்றுச் சுட்டு வன்கணத்தோடு முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் :சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும் - உகர ஈற்றுச் சுட்டின் முன்னும் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :உக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் என வரும். |
(53) |
256. | ஏனவை வரினே மேனிலை யியல. |
| |
இஃது உகர ஈற்றுச் சுட்டு ஒழிந்த கணங்களோடு முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஏனவை வரின் - உகர ஈற்றுச் சுட்டின் முன் வல்லெழுத்தல்லாத மென்கணம் முதலிய மூன்றும்வரின், மேல்நிலை இயல - அகர ஈற்றுச் சுட்டு முடிந்தாற்போல ஞநமத் தோன்றின் ஒற்று மிக்கும் யவ்வரினும் உயர்வரினும் வகரம் ஒற்றியுஞ் செய்யுளில் நீண்டு்ம் முடியும் என்றவாறு. |
உதாரணம் :உஞ்ஞாண் நூல் மணி எனவும், உவ்யாழ் உவ்வட்டு எனவும், உவ்வடை உவ்வாடை எனவும், ஊவயினான எனவும் வரும். |
(54) |
257. | சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே. |
| |
இஃது இவ் வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுகின்றது. |