226உயிர்மயங்கியல்

இதன் பொருள்:  சுட்டுமுதல்     இறுதி     -    சுட்டெழுத்தினை
முதலாகவுடைய உகர ஈற்றுப்பெயர், இயல்பாகும் - முற்கூறிய வல்லெழுத்து
மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : அதுகுறிது  இதுகுறிது உதுகுறிது  சிறிது தீது பெரிது என
வரும்.
 

முற்கூறியவை சுட்டுமாத்திரை, இவை சுட்டுப்பெயராக உணர்க.
 

(55)
 

258.

அன்றுவரு காலை யாவா குதலு
மைவரு காலை மெய்வரைந்து கெடுதலுஞ்
செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப.

 

இஃது  இவ்  வீற்றுச்  சுட்டு   முதற்பெயர்க்கு  ஓர்  செய்யுண்  முடிபு
கூறுகின்றது.
 

இதன் பொருள் :   அன்றுவரு  காலை   ஆவாகுதலும்   -   அதி காரத்தால்நின்ற  சுட்டுமுதல்   உகர    ஈற்றின்முன்னர்    அன்றென்னும்
வினைக்குறிப்புச்சொல்  வருங்காலத்து அத் தகரவொற்றின்  மேல் ஏறிநின்ற
உகரம்  ஆகாரமாய்த்  திரிந்துமுடிதலும்,   ஐ   வருகாலை  மெய்வரைந்து
கெடுதலும்  -  அதன்முன்னர்  ஐ  யென்னுஞ் சாரியை வருங்காலத்து அத்
தகரவொற்று நிற்க  அதன்மேல்   ஏறிய   உகரங்   கெடுதலும், செய்யுண்
மருங்கின்  உரித்தென  மொழிப - செய்யுட்கண்  உரித்தென்று சொல்லுவர்
ஆசிரியர் என்றவாறு.
 

உதாரணம் : அதாஅன்றம்ம      இதோஅன்றம்ம     உதாஅன்றம்ம
'அதாஅன்றென்ப    வெண்பா   யாப்பே'   எனவும்,   அதை   மற்றம்ம
இதைமற்றம்ம உதைமற்றம்ம எனவும் வரும்.
 

மொழிந்த  பொருளோடொன்ற  வவ்வயின்  முடியாததனை  முட்டின்றி
முடித்த  லென்பதனால்  அதன்று  இதன்று  உதன்று  என உகரங்கெட்டுத்
தகரவொற்று நிற்றல் கொள்க.
 

(56)
 

259.

வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.
 

இஃது இவ் வீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.