உயிர்மயங்கியல்229

'பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி'
 

(குறுந் - 180)
 

எனவும் வருதல் கொள்க.
 

(59)
 

262.

ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே.
 

இஃது  அவ்   வீற்று  மரப்பெயருள் ஒன்றற்கு  வல்லெழுத்து விலக்கி
மெல்லெழுத்து விதித்தது.
 

இதன் பொருள் :ஒடுமரக் கிளவி  - ஒடுவென்னும் மரத்தினை உணர
நின்ற சொல்,  உதிமர  இயற்று  -  உதியென்னும்  மரத்தின் இயல்பிற்றாய்
மெல்லெழுத்துப் பெற்று முடியும் என்றவாறு.
 

உதாரணம் :ஒடுங்கோடு  செதிள்  தோல் பூ என வரும். மரமென்றார்
ஒடுவென்னும் நோயை நீக்குதற்கு.
 

முன்னர் உதிமரத்தின்பின்னர்  அம்முப்  பெறுகின்ற  புளிமரம் வைத்த
இயைபான்  இதற்கு  அம்முப்பேறுங்  கொள்க. ஒடுவங்கோடு என  வரும்.
 

(60)
 

263.

சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையு
மொற்றிடைமிகாஅ வல்லெழுத்தியற்கை.

 

இது சுட்டுப்பெயர்க்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தது.
 

இதன் பொருள் :சுட்டுமுதல்   இறுதி   உருபியல்    நிலையும்   -
சுட்டெழுத்தினை    முதலாகவுடைய     உகர     ஈற்றுச்     சொற்கள்
பொருட்புணர்ச்சிக்கண்ணும்  உருபுபுணர்ச்சியிற் கூறிய  இயல்பிலே  நின்று
அன்சாரியைபெற்று  உகரங்கெட்டு  முடியும், வல்லெழுத்து  இயற்கை ஒற்று
இடை மிகாஅ  -  வல்லெழுத்து  இயற்கையாகிய  ஒற்று இடைக்கண் மிகா
என்றவாறு.
 

உதாரணம் அதன்கோடு இதன்கோடு உதன்கோடு செதிள் தோல் பூ
என  வரும்.  ஒற்றிடைமிகா  எனவே   சாரியை   வகுப்ப  வல்லெழுத்து
வீழாவென்பது பெற்றாம்.
 

வல்லெழுத்தியற்கை  யென்றதனான்  உகர  ஈற்றுள்  எருவுஞ் செருவும்
ஒழித்து ஏனையவற்றிற்கும் உருபிற்குச் சென்ற