சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை ஒடுவின்குறை எழுவின்புறம் கொழுவின்கூர்மை என வரும். இன்னும் இதனானே உதுக்காண் என்றவழி வல்லெழுத்து மிகுதலுங் கொள்க. |
(61) |
264. | ஊகார விறுதி யாகார வியற்றே. |
|
இது நிறுத்த முறையானே ஊகார ஈறு அல்வழிக்கட்புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஊகார இறுதி ஆகார இயற்று - ஊகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : தழூஉக்கடிது கொண்மூக்கடிது சிறிது தீது பெரிது என வரும். |
(62) |
265. | வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கு நினையுங் காலை யவ்வகை வரையார். |
|
இஃது இவ்வீற்று வினையெச்சத்திற்கு மிக்குமுடியுமென்றலின், எய்தாததெய்துவித்ததூஉம் முன்னிலை வினைக்கு இயல்பும் உறழ்பும் மாற்றுதலின் எய்தியது விலக்கியதூஉம் நுதலிற்று. |
இதன் பொருள் : வினையெஞ்சு கிளவிக்கும் - ஊகார ஈற்று வினையெச்சமாகிய சொற்கும், முன்னிலை மொழிக்கும் - முன்னிலை வினைச்சொற்கும், நினையுங்காலை அவ்வகை வரையார் - ஆராயுங்காலத்து அவ் வல்லெழுத்து மிக்கு முடியுங் கூற்றினை நீக்கார் என்றவாறு. |
உதாரணம் :உண்ணூக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், கைதூக்கொற்றா சாத்தா தேவா பூதா எனவும் வரும். |
நினையுங்காலை என்றதனான் இவ்வீற்று உயர்திணைப்பெயர்க்கும் அல்வழிக்கண் வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. ஆடூஉக்குறியன் மகடூஉக்குறியள் என வரும். உயர்திணைப் பெயர் |