268. | பூவெ னொருபெய ராயியல் பின்றே யாவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. |
|
இஃது ஊகார ஈற்றுள் ஒன்றற்கு உகரமும் இயைபு வல்லெழுத்தும் விலக்கிப் பெரும்பான்மை மெல்லெழுத்துஞ் சிறுபான்மை வல்லெழுத்தும் பெறுமென எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் :பூவென் ஒருபெயர் அ இயல்பு இன்று - பூவென்னும் ஊகார ஈற்றையுடைய ஒரு பெயர் மேற்கூறிய உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அவ்வியல்பின்மையை உடைத்து, ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து - அவ்விடத்து மெல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து என்றவாறு. |
உதாரணம் :பூங்கொடி சோலை தாமம் பந்து எனவும், பூக்கொடி செய்கை தாமம் பந்து எனவும் வரும். |
பூவென்பது பொலிவென்னும் வினைக்குறிப்பை உணர்த்தாது நிற்றற்கு ஒருபெய ரென்றார். |
(66) |
269. | ஊவெ னொருபெய ராவொடு சிவணும். |
|
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, உகரமும் வல்லெழுத்தும் விலக்கி னகரம் விதித்தலின். |
இதன் பொருள் : ஊவென் ஒருபெயர் - ஊவெனத் தசையை உணர்த்திநின்ற ஓரெழுத்தொருமொழி, ஆவொடு சிவணும் - ஆகார ஈற்றில் ஆவென்னுஞ் சொல் வல்லெழுத்துப்பெறாது னகர ஒற்றுப் பெற்று முடிந்தாற்போல னகர ஒற்றுப் பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் :ஊவென நிறுத்தி னகர ஒற்றுக் கொடுத்து ஊன்குறை செய்கை தலை புறம் என முடிக்க. 1ஊவென்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு ஆசிரியர் நூல்செய்த காலத்து வழக்கு. அன்றித் தேயவழக்கேனும் உணர்க. |
(67) |
|
1. இக் காலத்து ஊன் என்றே வழங்கலின் ஊ நூல் செய்த காலத்து வழக்கென்றார். |