270. | அக்கென் சாரியை பெறுதலு முரித்தே தக்கவழி யறிதல் வழக்கத் தான. |
|
இஃது எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : அக்கென் சாரியை பெறுதலும் உரித்து - அதிகாரத்தான் நின்ற ஊவென்னும் பெயர் முற்கூறிய னகரத்தோடு அக்கென்னுஞ் சாரியை பெற்று முடிதலும் உரித்து, வழக்கத்தான தக்கவழி அறிதல் - அம்முடிபு வழக்கிடத்துத் தக்க இடம் அறிக என்றவாறு. |
தக்கவழியறிதல் என்றதனாற் சாரியைபெற்றுழி னகரம் விலக்குண்ணாது நிற்றலும் முன் மாட்டேற்றால் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாது நிற்றலுங் கொள்க. |
உதாரணம் :ஊனக்குறை செய்கை தலை புறம் என வரும். |
வழக்கத்தான என்றதனான் ஊகார ஈற்றுச் சொல்லிற்கு உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கெடுக்க. கொண்மூவின்குழாம் உடூஉவின்றலை ஊவின்குறை என வரும். |
(68) |
271. | ஆடூஉ மகடூஉ வாயிரு பெயர்க்கு மின்னிடை வரினு மான மில்லை. |
|
இது 'குற்றெழுத் திம்பரும்' (எழு - 267) என்பதனுள் நிற்றலென்ற இலேசான் எய்திய வல்லெழுத்தேயன்றிச் சாரியையும் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்தியது. |
இதன் பொருள் :ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் - ஆடூஉ மகடூஉவாகிய உயர்திணைப்பெயர் இரண்டிற்கும், இன் இடைவரினும் மானம் இல்லை - முன்னெய்திய வல்லெழுத்தேயன்றி இன்சாரியை இடையேவரினுங் குற்றமில்லை என்றவாறு. |
உதாரணம் :ஆடூஉவின்கை மகடூஉவின்கை செவி தலை புறம் என வரும். |
மானமில்லை என்றதனான் இன் பெற்றுழி மேல் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. |
(69) |