272. | எகர வொகரம் பெயர்க்கீ றாகா முன்னிலை மொழிய வென்மனார் புலவர் தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான. |
|
இஃது எகர ஒகரம் ஈறாம் இடம் உணர்த்துகின்றது. |
இதன் பொருள் : தேற்றமுஞ் சிறப்பும் அல்வழி ஆன - தெளிவுபொருளுஞ் சிறப்புப்பொருளும் அல்லாத வேற்றுமைப் பொருண்மையிடத்து அளபெடுத்துக் கூறுதலின் உளவாகிய, எகர ஒகரம் பெயர்க்கு ஈறாகா - எகர ஒகரங்கள் பெயர்க்கு ஈறாய் வாரா, வினைக்கு ஈறாய் வரும், முன்னிலை மொழிய என்மனார் புலவர் - அவைதாந் தன்மையினும் படர்க்கையினும்வாரா, முன்னிலைச் சொல்லிடத்தனவாமென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
எனவே, தெளிவு பொருளினுஞ் சிறப்புப் பொருளினும் வந்து பெயர்க்கு ஈறாம் இடைச்சொல்லாகிய எகர ஒகரம் மூன்றிடத்திற்கும் உரியவாமென்று பொருளாயிற்று. என இங்ஙனம் 1அருத்தாபத்தியாற் கொண்டதற்கு இலக்கணம் மேலைச் சூத்திரத்தாற் கூறுப. |
உதாரணம் :ஏஎக்கொற்றா ஓஒக்கொற்றா சாத்தா தேவா பூதா என வரும். |
2இவை எனக்கு ஒரு கருமப்பணி எனவும், இங்ஙனஞ் செய்கின்றதனை ஒழியெனவும் முன்னிலையேவற் பொருட்டாய் வந்தன. இதற்கு வல்லெழுத்துப்பெறுமாறு மேலே கூறுப. |
(70) |
273. | தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வு மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா. |
|
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்து எய்தாததெய்துவித்தது. |
இதன் பொருள் : தேற்ற எகரமுஞ் சிறப்பின் ஒவ்வும் மேற்கூறு இயற்கை - முன்னர் அருத்தாபத்தியாற் பெயர்க் |
|
1. அருத்தாபத்தியாற்கொண்டது எ ன்றது, தேற்றமுஞ் சிறப்புமல்லாவழி, 'எகரவொகரம்பெயர்க்கீறாகா' எனவே தேற்றத்தும் சிறப்பினும் பெயர்க்கீறாய் வருமென்று கொண்டதை. |
2. ஏ - பணி, ஓ - ஒழி. |