236உயிர்மயங்கியல்

ஈற்று  இடைச்சொல்லும்,  எண்ணும் -  எண்ணுப்பொருண்மைக்கண் வரும்
ஏகார  ஈற்று   இடைச்சொல்லும்,  கூறிய  வல்லெழுத்து இயற்கையாகும் -
முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : யானேகொண்டேன் சென்றேன்  தந்தேன்   போயினேன்
என்புழி    யான்கொண்டிலேனென   மாறுகொண்ட   ஒழிபுபட   நின்றது.
நீயேகொண்டாய்  சென்றாய்  தந்தாய் போயினாய்  எனவும், நிலனே  நீரே
தீயே வளியே கொற்றனே சாத்தனே எனவும் வரும்.
 

கூறிய  என்றதனாற் பிரிநிலை ஏகாரமும் ஈற்றசை ஏகாரமும்  இயல்பாய்
முடிதல்  கொள்க. அவருள் இவனே கொண்டான் எனவும், 'கழியே, சிறுகுர
னெய்தலொடு  பாடோ வாதே  -  கடலே, பாடெழுந்தொலிக்கும்'  எனவும்
வரும்.
 

(73)
 

276.

வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.
 

இஃது இவ் வீற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : வேற்றுமைக்கண்ணும்  -  ஏகார ஈற்று வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று  -  ஊகார ஈறு  அல்வழிபோல
வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் :ஏக்கடுமை  சிறுமை தீமை பெருமை  எனவும், வேக்குடம்
சாடி தூதை பானை எனவும் வரும்.
 

வேக்குடம் வேதலையுடைய குடமென விரியும்.
 

(74)
 

277.

ஏயெ னிறுதிக் கெகரம் வருமே.
 

இது   வல்லெழுத்தினோடு   எகரம்   விதித்தலின்    எய்தியதன்மேற்
சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் :   ஏயென்   இறுதிக்கு   எகரம்   வரும்  -  அவ்
வேற்றுமைக்கண் ஏயென்னும் இறுதிக்கு எகரம் வரும் என்றவாறு.
 

உதாரணம் : 1ஏஎக்கொட்டில் சாலை துளை புழை எனவரும்.


1. ஏ - அம்பு.