வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக் கண்ணும் வருமெனக் கொள்க. ஏஎஞெகிழ்ச்சி நேர்மை என வரும். உரையிற் கோடலால் எகாரம் ஏற்புழிக் கொள்க. |
(75) |
278. | சேவென் மரப்பெய ரொடுமர வியற்றே. |
|
இஃது அவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. |
இதன் பொருள் :சே என் மரப்பெயர் - பெற்றமன்றிச் சேவென்னும் மரத்தினை உணரநின்ற பெயர், ஒடுமா இயற்று - ஒடுமரம்போல மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : சேங்கோடு செதிள் தோல் பூ என வரும். |
(76) |
279. | பெற்ற மாயின் முற்றவின் வேண்டும். |
|
இஃது இயல்பு வல்லெழுத்து விலக்கி இன் வகுத்தது. |
இதன் பொருள் : பெற்றம் ஆயின் - முற்கூறிய சேவென்பது பெற்றத்தினை உணர்த்திய பொழுதாயின், முற்ற இன் வேண்டும் - முடிய இன்சாரியை பெற்று முடியவேண்டும் என்றவாறு. |
உதாரணம் :சேவின்கோடு செவி தலை புறம் என வரும். |
முற்ற என்றதனானே முற்கூறிய சேவென்னும் மரப்பெயர்க்கும் ஏவென்பதற்கும் உருபிற்கு எய்திய சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்தல் கொள்க. சேவின்கோடு செதிள் தோல் பூ எனவும், ஏவின்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். |
சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் இன்பெறுதல் கொள்க. சேவினலம் மணிவால், சேவினிமில் சேவினடை சேவினாட்டம் என வரும். |
இன்னும் இதனானே இயல்புகணத்துக்கண் இன் பெறாது வருதலுங் கொள்க. செய்யுட்கண் 'தென்றற்கு வீணைக்குச் 1சேமணிக்குக் கோகிலத்திற் - கன்றிற்கு' என வரும். |
(77) |
|
1. சேமணி இன்பெறாது வந்தது. |