240உயிர்மயங்கியல்

கெடுத்துத்   தூதுணங்காய்  வழுதுணங்காய்  தில்லங்காய்   ஓலம்  போழ்
தாழங்காய் என முடிக்க.
 

284.

பனையின் முன்ன ரட்டுவரு காலை
நிலையின் றாகு மையெ னுயிரே
யாகாரம் வருத லாவயி னான.

 

இது நிலைமொழிச் செய்கை நோக்கி எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள் :பனையின்    முன்னர்    அட்டு    வருகாலை  -
முற்கூறியவாறன்றிப்  பனையென்னுஞ் சொன்முன்னர்  அட்டென்னுஞ்சொல்
வருமொழியாய்  வருங்காலத்து,  நிலையின்று   ஆகும்  ஐயென்  உயிர் -
நிற்றலில்லையாகும்  ஐயென்னும்  உயிர், ஆவயின் ஆன ஆகாரம் வருதல்
- அவ்விடத்து ஆகாரம் வந்து அம் மெய்ம்மேலேறி முடிக என்றவாறு.
 

உதாரணம் : பனாஅட்டு என வரும். இதற்கு மூன்றாவதும் ஆறாவதும்
விரியும்.
 

ஆவயினான என்றதனால்  ஓராநயம்  விச்சாவாதி  என்னும் வேற்றுமை
முடிபுங் கேட்டாமூலம்  பாறாங்கல்  என்னும்  அல்வழி  முடிபுங் கொள்க.
இவற்றுள் 1வடமொழிகளை மறுத்தலும் ஒன்று.
 

(82)
 

285.

கொடிமுன் வரினே யையவ ணிற்பக்
கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி.

  

இது மேல்  ஐகாரங் கெடுத்து  அம்முப்பெறுக  என்றார்,  ஈண்டு அது
கெடாதுநிற்க  என்றலின்  எய்தியது  இகந்து   படாமற்  காத்தது.  அம்மு
விலக்கி  வல்லெழுத்து   விதித்தலின்   எய்தியது   விலக்கிப்  பிறிதுவிதி
வகுத்ததுமாம்.
 

இதன் பொருள் :  முன்  கொடி  வரின் -  பனை  யென்னுஞ் சொன்
முன்னர்க்  கொடி  யென்னுஞ்  சொல்  வரின், ஐ  அவண்  நிற்ப - கேடு
ஓதிய ஐகாரம் ஆண்டுக் கெடாது நிற்ப,


1. வடமொழிகள் என்றது, ஓரா, விச்சா, கேட்டா என்பவைகளை.