வல்லெழுத்து மிகுதி கடிநிலையின்று - வல்லெழுத்த மிக்கு முடிதல் நீக்கு நிலைமையின்று என்றவாறு. |
உதாரணம் : பனைக்கொடி என வரும். இதற்கு இரண்டாவதும் மூன்றாவதும் விரியும். |
கடிநிலையின்று என்றதனான் ஐகார ஈற்றுப் பெயர்களெல்லாம் எடுத்தோத்தானும் இலேசானும் அம்முச்சாரியையும் பிற சாரியையும் பெற்றுழி அதிகார வல்லெழுத்துக் கெடுத்துக் கொள்க. |
இன்னும் இதனானே உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கட்சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. பனையின்குறை அரையின்கோடு ஆவிரையின்கோடு விசையின்கோடு ஞெமையின்கோடு நமையின்கோடு எனவும், தூதுணையின்காய் வழுதுணையின்காய் உழையின்கோடு வழையின்கோடு எனவும்வரும். |
பனைத்திரள் பனைந்திரள் என்னும் உறழ்ச்சிமுடிபு தொகைமரபினுட் புறநடையாற் கொள்க ; அல்வழியுமாதலின். அன்றி ஈண்டு அவணென் றதனாற் கொள்வாரும் உளர். |
(83) |
286. | திங்களு நாளு முந்துகிளந் தன்ன. |
|
இஃது இயைபு வல்லெழுத்தினோடு இக்குச் சாரியையும் வல்லெழுத்து விலக்கி ஆன்சாரியையும் வகுத்தலின் எய்தியதன் மேற் சிறப்புவிதியும் எய்தியது விலக்கிப் பிறதுவிதியுங் கூறுகின்றது. |
இதன் பொருள் : திங்களும் நாளும் - ஐகார ஈற்றுத் திங்களை உணரநின்ற பெயரும் நாளை உணரநின்ற பெயரும், முந்து கிளந்தன்ன - இகர ஈற்றுத் திங்களும் நாளும்போல இக்கும் ஆனும் பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் : சித்திரைக்குக்கொண்டான் கேட்டையாற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். சித்திரை 1நாளாயின் ஆன்சாரியை கொடுக்க. வல்லெழுத்துக் கேடுமுன்னர்க் 'கடிநிலை யின்று' (எழு - 285) என்றதனாற் கொள்க. |
|
1. நாள் - நட்சத்திரம். |