ஓகாரமும், வினாவும் - வினாப்பொருண்மையையுடைய ஓகாரமும், ஐயமும் - ஐயப்பொருண்மையையுடைய ஓகாரமும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும் - முற்கூறிய வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் :யானோகொண்டேன் எனவும், நீயோகொண்டாய் எனவும், பத்தோ பதினொன்றோ புற்றோ புதலோ எனவும் வரும். |
கூறிய என்றதனான் 'யானோ தேறே னவர்பொய் வழங்கலரே' (குறு - 21) எனப் பிரிநிலையும் நன்றோ தீதோ கண்டது எனத் தெரிநிலையும் ஓஒகொண்டான் எனச் சிறப்புங் 'குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளை மாவென்கோ' என எண்ணுநிலையும் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடிதல் கொள்க. இதனானே ஈற்றசை வருமேனும் உணர்க. |
(88) |
291. | ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்று - ஒழியசை ஓகாரத்தினது நிலையும் முற்கூறிய ஓகாரங்களின் இயல்பிற்றாய் இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் : 1கொளலோகொண்டான் செலலோசென்றான் தரலோதந்தான் போதலோபோயினான் என ஓசைவேற்றுமையான் ஒருசொல் தோன்றப் பொருள் தந்து நிற்கும். |
(89) |
292. | வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே யொகரம் வருத லாவயி னான. |
|
இஃது ஓகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று - ஓகார ஈற்று வேற்றுமைக்கண்ணும் அவ் வோகார ஈற்று அல்வழியோடு ஒத்து வல்லெழுத்து மிக்கு முடியும், ஆவயினான ஒகரம் வருதல் - அவ்விடத்து ஒகரம் வருக என்றவாறு. |
உதாரணம் :ஓஒக்கடுமை கோஒக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். |
(90) |
|
1. கொளலோகொண்டான் - கொள்ளுதலையோ செய்தான். ஏனையவுமன்ன. |