293. | இல்லொடு கிளப்பி னியற்கை யாகும். |
|
இஃது எய்தியது விலக்கிற்று. என்னை ? முன்னர் வன்கணம் வந்துழி ஒகரம் பெறுகவென வரைந்த கூறாதும் நிலைமொழித்தொழில் வரையாதுங் கூறலின் நான்கு கணத்துக் கண்ணுஞ் சேறலின். |
இதன் பொருள் : இல்லொடு கிளப்பின் இயற்கையாகும் - ஓகார ஈற்றுக் கோ வென்னும் மொழியினை இல்லென்னும் வருமொழியோடு சொல்லின் ஒகரம் மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் : 1கோவில் என வரும். கோவென்றது உயர்திணைப் பெயரன்றோவெனின், கோவந்ததென்று அஃறிணையாய் முடிதலின் அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற்பட்டதென்க. |
(91) |
294. | உருபிய னிலையு மொழியுமா ருளவே யாவயின் வல்லெழுத் தியற்கை யாகும். |
|
இது வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் :உருபியல் நிலையும் மொழியுமாருள - ஓகார ஈற்றுச் சிலபொருட்புணர்ச்சிக்கண் உருபு புணர்ச்சியது இயல்பிலேநின்று ஒன் சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள, ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் - அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் :கோஒன்கை செவி தலை புறம் என வரும். |
2சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்தை விலக்காமை இதனானும் பெற்றாம். |
(92) |
|
1. கோ - அரசன். இல் - அரண்மனை. கோ வந்தது என அஃறிணை வினையோடு முடிதலின் கோ என்னுஞ் சொல் பொருளாலுயர்திணையாயினும் சொல்லா லஃறிணை யென்றபடி. |
2. இதன்கண் வல்லெழுத்து இயற்கையாகுமென்று ஆசிரியர் கூறலின், சாரியைப்பேறு வல்லெழுத்தை விலக்காமை இதனானும் பெற்றாம் என்றார். |