246உயிர்மயங்கியல்

295.

ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்ன
ரல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே
யவ்விரு வீற்று முகரம் வருதல்
செவ்வி தென்ப சிறந்தசி னோரே.

  

இஃது ஒளகார ஈறு இருவழியும் முடியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் :  ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஒளகாரம்
இறுதியாகிய    பெயர்ச்சொன்    முன்னர்   வல்லெழுத்து   முதன்மொழி
வருமொழியாய்    வரின்,   அல்வழியானும்    வேற்றுமைக்கண்ணும்   -
அல்வழிக்கண்ணும்    வேற்றுமைக்கண்ணும்,    வல்லெழுத்து     மிகுதல்
வரைநிலையின்று  -  வல்லெழுத்து  மிக்கு முடிதல் நீக்கு நிலைமையின்று,
அவ்விரு   ஈற்றும்  உகரம்   வருதல்செவ்விதென்ப    சிறந்தசினோர்  -
அவ்விருகூற்று முடிபின் கண்ணும் நிலைமொழிக்கண் உகரம் வந்து முடிதல்
செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர் என்றவாறு.
 

உதாரணம் :கௌவுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், கடுமை சிறுமை
தீமை பெருமை எனவும் வரும்.
 

செவ்விதென்றதனான் மென்கணத்தும்  இடைக்கணத்தும் உகரம்பெறுதல்
கொள்க. கௌவு  ஞெமிர்ந்தது ஞெமிர்ச்சி  எனவும், வௌவுவலிது வலிமை
எனவும் வரும்.
 

நிலைமொழி  யென்றதனாற்  கௌவின்கடுமை  என உருபிற்குச் சென்ற
சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுங் கொள்க.
 

இன்னும்   இதனானே    ஐகாரமும்     இகரமும்    வேற்றுமைக்கண்
1உருபுதொகையாயுழி இயல்பாதல் கொள்க.
 

(93)
 

உயிர்மயங்கியல் முற்றிற்று.


1. உருபுதொகையாயுழி - உருபு தொக்கவிடத்து.