8. புள்ளிமயங்கியல் |
296. | ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்ன ரல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே யுகரம் வருத லாவயி னான. |
|
என்பது சூத்திரம். |
நிறுத்த முறையானே உயிரீறு புணர்த்துப் புள்ளியீறு வன்கணத்தோடுஞ் சிறுபான்மை ஏனைக் கணத்தோடும் புணருமாறு கூறலின் இவ் வோத்துப் புள்ளிமயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று. |
இச் சூத்திரம் ஞகார ஈறு வன்கணத்தோடு இருவழியும் புணருமாறு கூறுகின்றது. |
இதன்பொருள் :ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் - ஞகாரம் ஈற்றின்கண் ஒன்றாகநின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமையைச் சொல்லுமிடத்தும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகும் - வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின் அவ் வல்லெழுத்து வருமொழிக்கண் மிக்கு முடியும், ஆவயின் ஆன உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வரும் என்றவாறு. |
உதாரணம் :உரிஞுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், உரிஞுக்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். |
(1) |
297. | ஞநமவ வியையினு முகர நிலையும். |
|
இஃது அவ் வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்து வகரத்தோடும் முடியுமென எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் :ஞநமவ இயையினும் உகரம் நிலையும் - அஞ் ஞகர ஈறு வன்கணமன்றி ஞநமவ முதன்மொழி வருமொழியாய் வரினும் நிலைமொழிக்கண் உகரம் நிலைபெற்று முடியும் என்றவாறு. |