உதாரணம் :உரிஞுஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். |
யகரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகைமரபினுள் 1'உகரமொடு புணரும்' (எழு - 163) என்பதனாற் கூறினார். |
(2) |
298. | நகர விறுதியு மதனோ ரற்றே. |
|
இது நகர ஈறு முற்கூறிய கணங்களோடு அல்வழிக்கண் முடியுமாறு கூறி எய்தாத தெய்துவிக்கின்றது. |
இதன் பொருள் :நகர இறுதியும் - நகர ஈற்றுப் பெயரும் முற்கூறிய கணங்களோடு புணரும்வழி, அதனோரற்று - அஞ்ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு உகரம் பெற்றும் ஞநமவ வந்துழி உகரம் பெற்றும் முடியும் என்றவாறு. |
உதாரணம் :பொருநுக்கடிது வெரிநுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் வரும். முடிபு ஒப்புமைநோக்கி நகர ஈறு ஈண்டுப் புணர்த்தார். 2ஈண்டு வேற்றுமை யொழித்தது மாட்டேறு சென்றதென்று உணர்க. |
(3) |
299. | வேற்றுமைக் குக்கெட வகர நிலையும். |
|
இது நிலைமொழி உகரம் விலக்கி அகரம் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. |
இதன் பொருள் :வேற்றுமைக்கு - அந் நகர ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கு, உக்கெட அகரம் நிலையும் - |
|
1. உகரமொடு புணரும் என்பது, தொகைமரபு 21-ம் சூத்திரத்து யகரமும் உயிரும் வருவழி உகரம் பெறாவென்று விதித்ததை. |
2. ஈண்டு வேற்றுமை ஒழித்து மாட்டேறு சென்றதென்றது, நகரவிறுதி வல்லினம் வருங்கால வேற்றுமையினும் அல்வழியினும் உகரம்பெற்று வல்லெழுத்து மிக்கும், ஞநமவ வந்தால் உகரம்பெற்றும் முடியுமென்று மாட்டேற்றாற் கொள்ள நிற்றலின், அங்ஙனம் கொள்ளாது அல்வழிக்குமாத்திரம் மாட்டேற்றைக் கொள்க என்றபடி. நகரவிறுதிக்கு வேற்றுமை முடிபு வருஞ் சூத்திரத்தாற் கூறுப. |