மேலெய்திய உகரங்கெட அகரத்தோடு நிலைபெற்றுப் புணரும் என்றவாறு. |
உதாரணம் :பொருநக்கடுமை வெரிநக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை என வரும். அகரநிலையு மென்னாது உகரங்கெட என்றதனான் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்வுஞ் சிறுபான்மை உகரப்பேறுங் கொள்க. வெரிநின்குறை பொருநின்குறை உரிஞின்குறை எனவும், 'உயவல் யானை வெரிநுச் சென்றன்ன' (அகம் - 95) எனவும் வரும். யானையினது முதுகின்மேற் சென்றன்ன என விரிக்க. |
1பொருந் என்பது ஒரு சாதிப்பெயரும் பொருந்துத லென்னும் வினைப்பெயருமாம். |
(4) |
300. | வெரிநெ னிறுதி முழுதுங் கெடுவழி வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை. |
|
இஃது அந் நகர ஈற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : வெரிந் என் இறுதி - வெரிநென்று சொல்லப்படும் நகர ஈற்றுமொழி, முழுதுங் கெடுவழி - தன் ஈற்று நகரம் முன்பெற்ற உகரத்தோடு எஞ்சாமைக் கெட்ட இடத்து, மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்து - மெல்லெழுத்துப் பெறும் இயல்பு வந்து முடியும் இடனுடைத்து என்றவாறு. |
உதாரணம் : வெரிங்குறை செய்கை தலை புறம் என வரும். மெல்லெழுத்து வருமொழி நோக்கி வந்தது. 'வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை' என்பதில், 2நகர இகரமே இட்டெழுதுப. |
(5) |
|
1. பொருந் என்பது சாதிப்பெயர் என்றது, பொருநர்என்னுஞ் சாதியையுணர்த்திநின்றதென்றபடி. வினைப்பெயர் - தொழிற்பெயர். |
2. நகர இகரமே இட்டெழுதுப என்றது என்னையெனின்? வெரின் என னகர விகரமிட்டு எழுதுவாரை விலக்குதற்கு. |