புள்ளிமயங்கியல்255

உதாரணம் :முரண்கடிது  சிறிது  தீது  பெரிது  ஞெகிழ்ந்தது நீண்டது
மாண்டது வலிது  எனவும், முரட்கடுமை   சேனைதானை   பறை எனவும்,
முரண்ஞெகிழ்ச்சி  நீட்சி  மாட்சி   வலிமை   எனவும்   வரும். இதனைத்
'தொழிற்பெய   ரெல்லாம்'  (எழு  -  306)   என்றதன்   பின்  வையாத
முறையன்றிக்   கூற்றினான்   முரண்கடுமை  முரட்கடுமை,  அரண்கடுமை
அரட்கடுமை என்னும் உறழ்ச்சியுங் கொள்க.
 

(14)
 

310.

மகர விறுதி வேற்றுமை யாயிற்
றுவரக் கெட்டு வல்லெழுத்து மிகமே.

  

இது  முறையானே  மகர   ஈற்றுப்பெயர்  வேற்றுமைக்கட்  புணருமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள்:மகர    இறுதி    வேற்றுமை   ஆயின்  -   மகர
ஈற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட்  புணர்ச்சிக்கண்ணாயின், துவரக்  கெட்டு
வல்லெழுத்து மிகும் - அந்  நிலைமொழி மகரம் முற்றக் கெட்டு வருமொழி
வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் :  மரக்கோடு   செதிள்    தோல்    பூ   என   வரும்.
முண்டகக்கோதை எனவும் வரும்.
 

துவர    என்றதனான்    இயல்புகணத்துக்கண்ணும்     உயர்திணைப்
பெயர்க்கண்ணும்   1விரவுப்பெயர்க்கண்ணும்   மகரக்    கேடு   கொள்க.
மரஞாண்  மரநூல்  இவற்றிற்கு  நான்கனுருபு விரிக்க. மரமணி யாழ் வட்டு
அடை  ஆடை  என ஒட்டுக. நுங்கை  எங்கை செவி தலை புறம் எனவும்,
தங்கை செவி தலை புறம்  எனவும்  வரும்.  ஈண்டு மகரக்கேடே கொள்க;
முடிபு மேற்கூறுப. (எழு - 320)
 

(15)
 

311.

அகர ஆகாரம் வரூஉங் காலை
யீற்றுமிசை யகர நீடலு முரித்தே.

 

இஃது அவ் வீற்று முடிபு வேற்றுமையுடையன கூறுகின்றது.


1. நும் - விரவுப்பெயர்.