இதன் பொருள் :அகர ஆகாரம் வரூஉங் காலை - அகர முதன்மொழியும் ஆகார முதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்து - மகர ஒற்றின்மேல் நின்ற அகரம் நீண்டு முடிதலும் உரித்து நீடாமையும் உரித்து என்றவாறு. |
உதாரணம் :மரம் குளம் என நிறுத்தி மகரங்கெடுத்து அடி ஆம்பல் எனத் தந்து ரகர ளகரங்களில் நின்ற அகரம் ஆகாரமாக்கி மராஅடி குளாஅம்பல் என முடிக்க. |
மேற் 'செல்வழி யறிதல் வழக்கத் தான' (எழு - 312) என்பதனாற் குளாஅம்பல் என்புழி ஆகாரத்தை அகரமாக்குக. |
உம்மையான் மரவடி குளவாம்பல் என நீடாமையுங் கொள்க. |
வருமொழி முற்கூறியவதனான் இவ் வீற்றுப் பிறவும் வேறுபட முடிவன கொள்க. கோணாகோணம் கோணாவட்டம் என வரும். இவற்றிற்கு உள்ளென்னும் உருபு விரிக்க. |
கோணாகோணத்திற்கு வல்லெழுத்துக்கேடு 1மேலைச் சூத்திரத்து இலேசாற் கொள்க. |
(19) |
312. | மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே செல்வழி யறிதல் வழக்கத் தான. |
|
இது மகரங்கெட்டு வல்லெழுத்து மிகுதலோடு மெல்லெழுத்தும் உறழ்க என்றலின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் :மெல்லெழுத்து உறழும் மொழியுமாருள - மகர ஈற்றுள் வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப் பெற்று உறழ்ந்து முடியும் மொழிகளும் உள, வழக்கத்து ஆன செல்வழி அறிதல் - வழக்கத்தின்கண்ணும் வழங்கும் இடம் அறிக என்றவாறு. |
உதாரணம் :குளங்கரை குளக்கரை சேறு தாது பூமி என வரும். இவற்றுட் குளங்கரை குளக்கரைபோல அல்லன |
|
1. மேல் என்றது, வருஞ்சூத்திரத்தை. இலேசு என்றது, வழக்கத்தான என்பதை. |