புள்ளிமயங்கியல்257

ஒத்த உறழ்ச்சியாய் வழங்கா வென்றற்குச் செல்வழி யறிதலென்றார்.
 

வழக்கத்தான   என்றதனான்  குளத்துக்கொண்டான்  ஈழத்துச்சென்றான்
குடத்துவாய்   பிலத்துவாய்   என்றாற்போல்வன   மகரங்கெட்டு  அத்துப்
பெற்றன.   இவை   'அத்தே   வற்றே'  (எழு   -   133)   என்பதனான
1ஒற்றுக்கெடாதாயிற்று,   அஃது   அல்வழிக்குக்   கூறுதலின்.    மழகளிறு
என்பது 'மழவுங் குழவு மிளமைப்  பொருள' என்ற உரிச்சொல். அது  மகர
ஈறன்று. சண்பகங்கோடு என்பது வழக்கிடத்துச் செல்லாது.
 

இன்னும்   இதனானே  மகரங்கெடாது  நிற்பனவுங்  கொள்க. 'புலம்புக்
கனனே' (புறம் - 258)  'கலம்பெறு  கண்ணுளரொக்கற் றலைவ'  (மலைபடு
- 50) என வரும்
 

(17)
 

313.

இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே.
 

இஃது இவ் வீற்றுள்  ஒன்றற்கு  வல்லெழுத்து  விலக்கி  மெல்லெழுத்து
விதித்தது.
 

இதன் பொருள் :இல்ல  மரப்பெயர்  -  புக்கு  உறையும்  இல்லன்றி
இல்லமென்னும்  மரத்தினை   உணரநின்ற  சொல்,  விசைமர  இயற்று  -
விசையென்னும்  மரத்தின்  இயல்பிற்றாய்  மெல்லெழுத்து  மிக்கு  முடியும்
என்றவாறு.
 

உதாரணம் :இல்லங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
 

மேலைச்  சூத்திரத்து 'வழக்கத் தான'   (எழு  -  312)   என்றதனான்
மகரக்கேடு கொள்க.
 

(18)

314.

அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும்.
 

இது  மகரம்  அல்வழிக்கண்   திரிக  என  முற்கூறாமையின்  எய்தாத
தெய்துவித்தது.


1. ஒற்றென்றது, நிலைமொழி மகரத்தை.