புள்ளிமயங்கியல்259

315.

அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே யாசிரி யர்க்க
மெல்லெழுத்து மிகுத லாவயி னான.

 

இது மகர  ஈற்று  அல்வழிக்கண் இம்   மொழி   இம்  முடிபு  எய்துக
என்றலின் எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள் :  அகம்  என்  கிளவிக்குக்   கைமுன்   வரின்   -
அகமென்னுஞ் சொல்லிற்குக்  கையென்னுஞ்சொல்  முன்னே   வருமாயின்,
முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன்னின்ற  அகரங்கெடாதுநிற்ப
அதன்    முன்னின்ற ககரமும்   மகர    வொற்றுங்   கெட்டு  முடிதலுங்
கெடாதுநின்று   முடிதலும்,   வரை  நிலை  இன்றே யாசிரி யர்க்க - நீக்கு
நிலைமையின்று   ஆசிரியர்க்கு, ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல் -
அவை கெட்டவழி மெல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு.
 

உதாரணம் :அங்கை    என   வரும். அகங்கை   எனக்   கெடாது
முடிந்தவழி 1'அல்வழியெல்லாம்'  (எழு - 314) என்றதனான்  மகரந் திரிந்து
முடிதல்    கொள்க.     இது      பண்புத்தொகை.    2அதிகாரத்தானும்
பொருணோக்கானும் வேற்றுமைத்தொகை யன்மை உணர்க.
 

(20)
 

316.

இலமென் கிளவிக்குப் படுவரு காலை
நிலையலு முரித்தே செய்யு ளான.

 

இஃது   இலமென்பது   முற்றுவினைச்   சொல்லாகாது    குறிப்பாகிய
உரிச்சொல்லாய் நிற்குங்கால் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் :இலம்  என்   கிளவிக்கு   -  இல்லாமையென்னும்
குறிப்பாகிய உரிச்சொற்கு, படு வருகாலை - உண்டாத


1. 'அல்வழியெல்லாம்' என்றது இதற்கு முதற் சூத்திரத்தை.
 

2. அதிகாரத்தானும் என்றது அல்வழி அதிகாரப்பட்டு நின்றமையை.
பொருள் என்றது உள்ளங்கையெனப் பொருள் தருதலை.