260 புள்ளிமயங்கியல்

லென்னும்    1வினைக்குறிப்புப்பெயர்    வருமொழியாய்    வருங்காலத்து,
செய்யுளான நிலையலும் உரித்து  - செய்யுளிடத்து மகரக்கேடுந் திரிபுமின்றி
நிற்றலும் உரித்து என்றவாறு.
 

எனவே, உம்மையாற்    பிறசொல்    வருங்காலத்துக்   கேடுந்திரிபும்
பெற்று நிற்றலும் உரித்தெனக் கொள்க.
 

உதாரணம் :  'இலம்படு  புலவ  ரேற்றகை நிறைய' இதற்கு இல்லாமை
உண்டாகின்ற  புலவரெனப்  பொருள்   கூறுக. 'இலம்பாடு   நாணுத்தரும்'
என்கின்றதோவெனின், இல்லாமை  உண்டாதல் நாணுத்தருமென்று பொருள்
கூறுக.  இதனை   நெற்பாடு    பெரிதென்றாற்போலக்    கொள்க.   இது
பொருளிலமென   முற்றுவினைச் சொல்லாமாறும் உணர்க. இலநின்றதெனக்
கெட்ட வாறும்; இலங்கெடவியந்தான்,  இலஞ்சிறிதாக, இலந்தீதென்று எனக்
கசதக்கள் வரும்வழித் திரிந்தவாறுங் காண்க.
 

'எல்லா'  (எழு - 314) மென்றதனான்,  இலம்வருவது  போலும்,  இலம்
யாரிடத்தது   என    வகர   யகரங்களின்  முன்னர்க்  கெடாது  நிற்றல்
கொள்க.


1. வினைக்குறிப்புப்    பெயரென்றது,    குறிப்பாகக்    காலங்காட்டும்
முதனிலைத் தொழிற்பெயரை.  படு என்பது உண்டாகின்ற எனக் குறிப்பாகக்
காலங்காட்டல்பற்றிக்   குறிப்பு  என்றார். இலத்தாற்  பற்றப்பட்ட   என்று
பொருளுரைக்குங்கால்      பற்றுதற்கு      முதனிலை     யின்றென்பது
நச்சினார்க்கினியர் கருத்து. படு என்பதை வினைத்தொகையாகக் கொள்ளின்
இரண்டுகாலத்துக்கும்   பொதுவாகும்.   இரண்டு  காலம்  என்றது  இறப்பு
நிகழ்வினை. படு என்பது இரண்டுகாலமும் பற்றி  விரியுங்கால் பட்ட  படும்
என விரியும். அவ்விரண்டுந் தொக்க முதனிலை படு என்பது. படு என்பதை
முதனிலைத்    தொழிற்பெயராக    வைத்து   வருமொழியாக   ஆசிரியர்
எடுத்தோதினாரன்றி   வினைத்   தொகையாயின் படுபுலவர் என்பதில் படு
என்பதைப் பிரித்து  வருமொழியாகக் கூறாரென்பது  கருதி  முதனிலையாய்
நிற்றலின் அதனை எடுத்தோதினா ரென்றார். படு என்பது பட்ட என்பதற்கு
முதனிலை யாகுமேயன்றி  பற்ற    என்பதற்கு   முதனிலையாகாதென்பார்
இரண்டு  முதனிலைகூடி  ஒன்றாய்நின்று  பற்றுதலைச் செய்யப்பட்ட எனப்
பொருள் தராமையானும் என்றார். இங்கே  பற்றுதற்குரிய முதனிலையில்லை.
ஆதலின் படு என்பது பட்ட எனப் பொருள் தருமன்றிப் பற்றப்பட்ட எனப்
பொருள் தராமையின் உரையாசிரியர் கருத்துப் பொருந்தாதென்பது கருத்து.