318. | அடையொடு தோன்றினு மதனோ ரற்றே. |
|
இஃது 'அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய' (எழு - 110) என்றமையின் அவ் வெண்ணுப் பெயரை அடையடுத்து முடிக்கின்றது. |
இதன் பொருள்: அடையொடு தோன்றினும் - அவ்வாயிரமென்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியோடுவரினும், அதனோரற்று - முற்கூறியதனோடு ஒருதன்மைத்தாய் அத்துப்பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் :பதினாயிரத்தொன்று இரண்டு இருபதினாயிரத்தொன்று ஆறாயிரத்தொன்று நூறாயிரத்தொன்று முந்நூறாயிரத்தொன்று ஐந்நூறாயிரத்தொன்று என ஒட்டுக. முன்னர் இலேசினான் முடிந்தவற்றையும் அடையடுத்து ஒட்டுக. பதினாயிரத்துக்குறை புறம் கூறு முதல் எனவும், நூறாயிரப்பத்து எனவும் வரும். |
(23) |
319. | அளவு நிறையும் வேற்றுமை யியல. |
|
இஃது அவ் வெண்ணின் முன்னர் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வந்தால் முடியுமாறு கூறுதலின் எய்தாததெய்துவித்தது. |
இதன் பொருள் :அளவும் நிறையும் - அதிகாரத்தால் ஆயிரந் தானே நின்றுழியும் அடையடுத்து நின்றுழியும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால், வேற்றுமை இயல - மகர ஈற்று வேற்றுமையோடு ஒத்து வல்லெழுத்து வந்துழி மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கும் இயல்புகணம் வந்துழித் 'துவர' (எழு - 310) என்னும் இலேசான் எய்திய மகரங் கெட்டும் புணரும் என்றவாறு. |
உதாரணம் : ஆயிரம் பதினாயிரம் நூறாயிரம் என நிறுத்திக் கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டில் அகல் உழக்கு எனவும், கஃசு கழஞ்சு தொடி துலாம் பலம் எனவுந் தந்து ஒட்டுக. |
வேற்றுமையியல எனவே தாம் வேற்றுமை யல்லவாயின. |
(24) |