இதன் பொருள் :படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் - எல்லாருமென்னும் படர்க்கைப்பெயரும் எல்லீருமென்னும் முன்னிலைப்பெயரும், தொடக்கங் குறுகும் பெயர்நிலைக்கிளவியும் - கிளைத்தொடர்ச்சிப் பொருளவாய் நெடுமுதல் குறுகிமுடியுந் தாம் நாம் யாமென்னும் பெயராகிய நிலைமையையுடைய சொல்லும், வேற்றுமையாயின் உருபியல் நிலையும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணாயின் உருபு புணர்ச்சிக்குக் கூறிய இயல்பின்கண்ணே நின்று முடியும், ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல் - மேல் நெடுமுதல் குறுகும் மொழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |