புறம் என முடிக்க. தொடக்கங் குறுகுவனவற்றிற்கு இச் சூத்திரத்தான் மெல்லெழுத்து மிகுக்க. |
உருபியல் நிலையும் என்பதனான் வேற்றுமையாதல் பெறா நிற்கவும் பின்னும் வேற்றுமையாயினென்ற மிகையானே படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் இயல்புகணத்து ஞகாரமும் நகாரமும் வந்துழித் தம்முச்சாரியையும் நும்முச்சாரியையும் பெறுதலும் மகரங்கெட்டு உம்முப்பெறுதலும் ஆவயினான என்றதனான் ஒற்று இரட்டுதலுங் கொள்க. எல்லார்தஞ் ஞாணும் எல்லீர்நுஞ் ஞாணும் நூலும் என வரும். |
இனி தொடக்கங் குறுகுவனவற்றிற்கும் 1அவ்விரண்டு இலேசானும் மகரங்கெடுதலும் ஒற்று இரட்டுதலுங் கொள்க. தஞ்ஞாண் நஞ்ஞாண் எஞ்ஞாண் நூல் என வரும். |
இன்னும் ஆவயினான என்றதனானே எல்லார்தம் எல்லீர் நும் என நின்றவற்றின் முன்னர் ஏனை மணி யாழ் வட்டு அடை என்பன வந்துழி மகரங்கெடாமையும் உம்முப்பெறுதலுங் கொள்க. |
இன்னும் இதனானே தொடக்கம் குறுகுவனவற்றிற்குந் தம்மணி யாழ் வட்டு அடை என மகரங்கெடாமையும் கொள்க. |
இன்னும் இதனானே 2தமகாணம் நமகாணம் எமகாணம் நுமகாணம் என உருபீற்றுச் செய்கைகளுங் கொள்க. |
இன்னும் இதனானே 3நும் என்பதற்கு மகரத்தை மெல்லொற்றாக்கி நுங்கை செவி தலை புறம் என வருதலும், நுஞ்ஞாண் என ஒற்றிரட்டுதலும், நும்வலி என மகரங் கெடாது நிற்றலுங் கொள்க. |
இன்னும் இதனானே எல்லார்கையும் எல்லீர்கையும் எனத் தம்மும் நும்மும் பெறாது நிற்றலுங் கொள்க. |
(25) |
|
1. அவ் விரண்டு இலேசு என்றது, வேற்றுமையாயின் என்றதையும் ஆவயினான் என்றனதையும். |
2. தமகாணம் - ஆறாம்வேற்றுமை அகர உருபு. |
3. நும் தொடக்கங் குறுகும் மொழியன்மையின் இலேசினால் முடித்தார். |