புள்ளிமயங்கியல்265

321.

அல்லது கிளப்பி னியற்கை யாகும்.
 

இது முற்கூறிய மூன்று பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் :அல்லது  கிளப்பின் இயற்கை யாகும் - அம் மூன்று
பெயரும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல்பாய் முடியும் என்றவாறு.
 

ஈண்டு   இயற்கையென்றது  சாரியை   பெறாமை  நோக்கி.  இவற்றின்
ஈறுதிரிதல்   'அல்வழி    யெல்லாம்'    (எழு   -   314)   என்பதனுள்
எல்லாமென்றதனாற் கொள்க.
 

உதாரணம் :  எல்லாருங்   குறியர்   சிறியர்  தீயர் பெரியர் எனவும்,
எல்லீருங் குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் எனவும், தாங்குறியர் சிறியர் தீயர்
பெரியர் எனவும், தாங்குறிய சிறிய தீய பெரிய எனவும், நாங்குறியம் சிறியம்
தீயம் பெரியம் எனவும், யாங்குறியேம் சிறியேம் தீயேம் பெரியேம் எனவும்
வரும்.
 

இன்னும் எல்லா மென்றதனானே   இவற்றின்  முன்னர்  ஞகார நகாரம்
வந்தால் அவை அவ்வொற்றாய்த்  திரிதல் கொள்க.  எல்லாருஞ் ஞான்றார்
நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர்  நீண்டீர் எனவும்,  தாஞ்ஞான்றார் நீண்டார்
எனவும்,  நாஞ்ஞான்றாம்  நீண்டாம் எனவும், யாஞ்ஞான்றேம்   நீண்டேம்
எனவும் வரும்.
 

இனி எல்லாரும்  வந்தார்  யாத்தார்   அடைந்தார்,  எல்லீரும் வந்தீர்
யாத்தீர் அடைந்தீர் எனவும், தாம் வந்தார் யாத்தார்  அடைந்தார் எனவும்,
நாம்  வருதும்  யாத்தும்  அடைதும், யாம்வருவேம் யாப்பேம் அடைவேம்
எனவும்  ஏனைக்கணங்களின்  முன்னர்  மகரந் திரியாது  நிற்றலும் 'உயிரீ
றாகிய உயர்திணைப் பெயரும்' (எழு - 153) என்பதனான் முடியும்.
 

(26)
 

322.

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணு
மெல்லா மெனும்பெய ருருபிய னிலையும்
வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது.

 

இஃது   இவ்வீற்றுள்  விரவுப்பெயருள்  ஒன்றற்கு   அல்வழிக்கண்ணும்
வேற்றுமைக்கண்ணும் உருபியலோடு மாட்டெறிந்து எய்தாத தெய்துவித்தது.