266 புள்ளிமயங்கியல்

இதன் பொருள் :அல்லது   கிளப்பினும்   வேற்றுமைக்கண்ணும்   -
அல்வழிக்கட்    சொல்லினும்   வேற்றுமைப்    பொருட்   புணர்ச்சிக்கட்
சொல்லினும், எல்லாமெனும்  பெயர் உருபியல் நிலையும் - எல்லாமென்னும்
விரவுப்பெயர் உருபு  புணர்ச்சியின் இயல்பிலேநின்று  முடியும்,  வேற்றுமை
யல்வழிச்   சாரியை  நிலையாது  -  அப்பெயர்  வேற்றுமைப்   பொருட்
புணர்ச்சியல்லாத இடத்து வற்றுச்சாரியை நில்லாதாய் முடியும் என்றவாறு.
 

உருபியனிலையும்  என்ற   மாட்டேறு  அல்வழிக்கண்  உம்முப்பெற்று
நிற்றலும்  பொருட்  புணர்ச்சிக்கண் வற்றும்  உம்மும்   பெற்று  நிற்றலும்
உணர்த்திற்று.
 

உம்முச்சாரியை ஒன்றுமே பெற்று முடிகின்ற  அல்வழியினையும் வற்றும்
உம்மும்   பெற்று   முடிகின்ற   வேற்றுமையோடு    உடனோதி அதுவும்
வற்றுப்பெறுமாறுபோல      மாட்டெறிந்த     மிகையானே   வன்கணத்து
அல்வழிக்கண் நிலைமொழி மகரக்கேடும் வருமொழி  வல்லெழுத்துப்பேறும்
மென்கணத்து  மகரங்கெட்டு உம்முப்பெற்றும் பெறாதும்  வருதலும் ஏனைக்
கணத்து மகரங்கெட்டு  உம்முப்பெற்றும்  மகரங்கெடாது  உம்முப்பெறாதும்
வருதலுங் கொள்க.
 

உதாரணம் :எல்லாக்   குறியவும்  சிறியவும்   தீயவும்    பெரியவும்
எனவும், எல்லாஞாணும் நூலும் மணியும் எனவும், எல்லாஞான்றன நீண்டன
மாண்டன   எனவும்,   எல்லாயாழும்   வட்டும்     அடையும்  எனவும்,
எல்லாம்வாடின   ஆடின எனவும்   வரும்.   இனி     வேற்றுமைக்கண்
எல்லாவற்றுக்கோடும்   செவியும் தலையும்   புறமும்   என இவை வற்றும்
உம்மும்   பெற்றன.   இவற்றிக்கு    மகரம்    வற்றின்மிசையொற்றென்று
கெடுக்க.   இனி  மென்கணத்துக்கண் எல்லாவற்றுஞாணும் நூலும் மணியும்
எனவும், ஏனைக்கணத்துக்கண்  எல்லாவற்றியாப்பும்   வலியும்   அடையும்
எனவும் வரும். ஏனைக்கணமும் வற்றும் உம்மும் பெற்றன.
  

(27)
 

323.

மெல்லெழுத்து மிகினு மான மில்லை.
 

இஃது ஒருசார்  வல்லெழுத்தை   விலக்கி  மெல்லெழுத்து விதித்தலின்
எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.