இதன் பொருள் : மெல்லெழுத்து மிகினும் மான மில்லை - அவ் வெல்லாமென்பது அல்வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்றமில்லை என்றவாறு. |
எனவே, வல்லெழுத்து மிகுதலே பெரும்பான்மையாயிற்று. முற்கூறிய செய்கைமேலே இது கூறினமையின் மகரக்கேடும் உம்முப்பேறுங் கொள்க. |
எல்லாங்குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் என வரும். |
மானமில்லை என்றதனான் உயர்திணைக்கண் வன்கணத்து மகரங்கெட்டு வல்லெழுத்துமிக்கு இறுதி உம்முப்பெற்று முடிதலும் இயல்புக்கணத்துக்கண் மகரங்கெட்டு உம்முப்பெற்று முடிதலுங் கொள்க. எல்லாக்கொல்லரும் சான்றாரும் தச்சரும் பார்ப்பாரும் குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் எனவும், எல்லாஞான்றாரும் நாய்கரும் மணியகாரரும் வணிகரும் அரசரும் எனவும் வரும். |
இன்னும் இதனானே உயர்திணைக்கண் எல்லாங் குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் என மகரங்கெட்டு மெல்லெழுத்து மிக்கு உம்முப்பெறுதலும் எல்லாங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், 1குறியீர் குறியம் எனவும் உம்முப் பெறாது வருதலுங் கொள்க. |
இன்னும் இதனானே இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் மகரங்கெடாது உம்மின்றி வருதலுங் கொள்க. எல்லாம்வந்தேம் அடைந்தேம் என வரும். |
(28) |
324. | உயர்திணை யாயி னுருபிய னிலையும். |
|
இஃது எல்லாமென்பதற்கு உயர்திணைமுடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் :உயர்திணை யாயின் உருபியல் நிலையும் - எல்லாமென்பது உயர்திணையாய் நிற்குமாயின் உருபு |
|
1. குறியீர், குறியம் என்பவற்றை, எல்லாங் குறியீர், எல்லாங் குறியம் என ஒட்டுக. குறியீர் என்பது முன்னிலையைக் காட்டவும், குறியம் என்பது தன்மையைக் காட்டவும் வந்த வருமொழிகள். |