326. | அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை யுக்கெட நின்ற மெய்வயி னீவர இயிடை நிலைஇ யீறுகெட ரகர நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே யப்பான் மொழிவயி னியற்கை யாகும். |
|
இது நும்மென்பதற்கு அல்வழி முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை - நும்மென்பதனை அல்வழிக்கட் கூறுமிடத்து, உ கெட நின்ற மெய்வயின் ஈவர - நகரத்துள் உகரங் கெட்டுப்போக ஒழிந்து நின்ற நகரவொற்றிடத்தே ஈகாரம் வந்து நிற்ப, இ இடை நிலை இ ஈறுகெட - ஓர் இகரம் இடையிலே வந்து நிலைபெற்று மகரமாகிய ஈறுகெட்டுப்போக, புள்ளியொடு புணர்ந்து ரகரம் நிற்றல்வேண்டும் - ஆண்டுப் புள்ளி பெற்று ஒரு ரகரம் வந்து நிற்றலை விரும்பும் ஆசிரியன், அப்பால் மொழிவயின் - அக் கூற்றினையுடைய நிலைமொழியிடத்து, இயற்கையாகும் - வருஞ்சொல், இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் :நீயிர்குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் என வரும். |
சொல்லுங்காலை யென்றதனானே நீயிர்ஞான்றீர் நீண்டீர் மாண்டீர் யாத்தீர் வாடினீர் அடைந்தீர் என ஏனைக்கணத்திலும் ஒட்டுக. |
(31) |
327. | தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. |
|
இது வேற்றுமைக்கண் மகரங்கெட்டு வல்லெத்து மிக்கும் அல்வழிக்கண் மெல்லெழுத்தாய்த் திரிந்தும் வருமென எய்தியதனை விலக்கி ஞகர ஈற்றுத் தொழிற்பெயர்போல நிற்குமெனப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : தொழிற்பெய ரெல்லாம் - மகர ஈற்றுத் தொழிற்பெயரெல்லாம், தொழிற்பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற் பெயர்போல அல்வழியினும் வேற்றுமையினும் |