சிறப்புப்பாயிரம்13

இருகாரணத்தானும்  எழுத்துஞ்  சொல்லும்  பொருளும் ஆராய்ந்தாரெனின்
அகத்தியர்க்கு     மாறாகத்     தாமும்    முதனூல்    செய்தாரென்னும்
பொருடருதலானும்,  அங்ஙனம்   கொடுந்தமிழ்   கொண்டு   இலக்கணஞ்
செய்யக்   கருதிய   ஆசிரியர்     குறைபாடுடையவற்றிற்குச்   செந்தமிழ்
வழக்கையும்   முந்துநூலையும் ஆராய்ந்து  முறைப்பட  எண்ணினாரெனப்
பொருடருதலானும் அது பொருளன்மை உணர்க.
 

இன்னும்   முந்துநூல்கண்டு    முறைப்படவெண்ணி   யென்றதனானே
முதல்வன் வழிநூல் செய்யுமாற்றிற்கு  இலக்கணங் கூறிற்றிலனேனும் அவன்
நூல்செய்த  முறைமைதானே  பின்பு  வழி நூல் செய்வார்க்கு இலக்கணமா
மென்பது  கருதி  இவ்வாசிரியர்  செய்யுளியலிலும்  மரபியலிலும்  அந்நூல்
செய்யும்   இலக்கணமும்   அதற்கு   உரையுங்   காண்டிகையுங்   கூறும்
இலக்கணமுங்  கூறிய அதனையே ஈண்டுங் கூறினாரென்று உணர்க. அவை
அவ்வோத்துக்களான் உணர்க.
 

'யாற்ற தொழுக்கே தேரைப் பாய்வே
சீய நோக்கே பருந்தின் வீழ்வென்
றாவகை நான்கே கிடக்கை முறையே.'
 

 

'பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் சூத்திரம் பன்ன னான்கே.'

 

'அவற்றுள்
பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை
நாடித் திரிபில வாகுதல் பொழிப்பே.'
 

 

'தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினுந்
துன்னிய கடாவின் புறந்தோன்றும் விகற்பம்
பன்னிய வகல மென்மனார் புலவர்.' 

 

'ஏதுவி னாங்கவை துடைத்த னுட்பம்.' 

 

'துடைத்துக் கொள்பொரு ளெச்ச மாகும்.' 

 

'அப்புல மரிறப வறிந்து முதனூற்
பக்கம் போற்றும் பயன்றெரிந் துலகந்
திட்ப முடைய தெளிவர வுடையோ
னப்புலம் படைத்தற் கமையு மென்ப.' 

 

'சூத்திர முரையென் றாயிரு திறத்தினும்
பாற்படத் தோற்றல் படைத்த லென்ப
நூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே.' 

 

இவற்றை விரித்து உரைக்க.
 

சிறப்புப்பாயிரம் முற்றிற்று.