290 புள்ளிமயங்கியல்

பீரத்  தலர்சிலர்  கொண்டே' (குறு - 98)  எனப் பீர்  அத்துப் பெறுதலுங்
கொள்க. இதனை அதிகாரப் புறனடையான் முடிப்பாரும் உளர்.
 

இன்னும்  இதனானே  கூர்ங்கதிர்வேல் ஈர்ங்கோதை என்றாற்போலவுங்
குதிர்ங்கோடு  விலர்ங்கோடு  அயிர்ங்கோடு  துவர்ங்கோடு  சிலிர்ங்கோடு
என்றாற்போலவும் மெல்லெழுத்து மிகுவன கொள்க.
 

இன்னும் இதனானே துவரங்கோடு என அம்முப்பெறுதலுங் கொள்க. 
 

(68)
 

364.

சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்.
 

இஃது எய்திய தன்மேற் சிறப்புவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : சார்  என்  கிளவி   காழ்   வயின்   வலிக்கும் -
சாரென்பது காழென்பதனோடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும்
என்றவாறு.
 

உதாரணம் : சார்க்காழ்  என வரும். சாரினது வித்தென்பதே பொருள்.
1இதனை வயிரமெனிற் கிளந்தோதுவாரென்று உணர்க.
 

(69)
 

365.

பீரென் கிளவி யம்மொடுஞ் சிவணும்.
 

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : பீர்   என்    கிளவி   அம்மொடுஞ்   சிவணும் -
பீரென்னுஞ்சொல்  மெல்லெழுத்தேயன்றி   அம்முப்   பெற்றும்   முடியும்
என்றவாறு.
 

உதாரணம் : பீரங்கொடி     செதிள்     தோல்     பூ    எனவும்,
'பொன்போற்பீரமொடு  பூத்த  புதன்மலர்'  (நெடுநல்வாடை - 14)  எனவும்
வரும். உம்மை இறந்ததுதழீஇயிற்று.
 

(70)
 

366.

லகார விறுதி னகார வியற்றே.
 

இது முறையானே லகார  ஈற்றை  வேற்றுமைப்  பொருட்புணர்ச்சிக்கட்
புணர்க்கின்றது. 


1. இதனை என்றது காழை.