புள்ளிமயங்கியல்291

இதன் பொருள் : லகார இறுதி  னகார இயற்று - லகார ஈற்றுப்பெயர்
வன்கணம்  வந்துழி  னகார  ஈற்று   இயல்பிற்றாய்   லகரம்   றகரமாய்த்
திரிந்துமுடியும் என்றவாறு.
 

உதாரணம் : கற்குறை சிறை தலை  புறம் நெற்கதிர் சோறு தலை புறம்
என வரும். 
 

(71)
 

367.

மெல்லெழுத் தியையி னகார மாகும்.
 

இது னகாரமாமென்றலின் அவற்றிற்கு எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள் : மெல்லெழுத்து இயையின் னகாரமாகும் - அவ் வீறு
மென்கணம் வந்து இயையின் னகாரமாகத் திரிந்து முடியும் என்றவாறு.
 

உதாரணம் : கன்ஞெரி நுனி முரி என வரும்.
 

இச்சூத்திரத்தினை   வேற்றுமை   யிறுதிக்கண்  அல்வழியது  எடுத்துக்
கோடற்கட்  சிங்கநோக்காக   வைத்தமையான்   அல்வழிக்கும்  இம்முடிபு
கொள்க. கன்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். 
 

(72)
 

368.

அல்வழி யெல்லா முறழென மொழிப.
 

இஃது அவ் வீற்று அல்வழிமுடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : அல்வழியெல்லாம்  உறழென மொழிப - இவ் வீற்று
அல்வழிகளெல்லாந்  தந்திரிபு  வல்லெழுத்தினோடு  உறழ்ந்துமுடியுமென்று
கூறுவர் புலவர் என்றவாறு.
 

உதாரணம் : கல்குறிது கற்குறிது சிறிது தீது பெரிது என வரும்.
 

எல்லாமென்றதனாற்  கல்குறுமை  கற்குறுமை  சிறுமை தீமை பெருமை
எனக் குணம்பற்றி வந்த வேற்றுமைக்கும் உறழ்ச்சி கொள்க.
 

இன்னும் இதனானே  வினைச்சொல்லீறு திரிந்தனவும் உருபுதிரிந்தனவுங்
கொள்க. வந்தானாற்கொற்றன் பொருவானாற்