போகான் எனவும். 1அத்தாற்கொண்டான் இத்தாற்கொண்டான் உத்தாற்கொண்டான் எத்தாற்கொண்டான் எனவும் வரும். |
2அக்காற்கொண்டான் என்றாற்போலப் பிறவும் முடிபு உள்ளனவெல்லாம் இதனான் முடித்துக்கொள்க. |
(73) |
369. | தகரம் வருவழி யாய்த நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே. |
|
இது லகரம் றகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரியுமென்றலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் - தகரம் முதலாகிய மொழி வந்தால் லகரம் றகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரிந்துநிற்றலும், புகர் இன்று என்மனார் புலமையோர் - குற்றமின்றென்று சொல்லுவார் ஆசிரியர் என்றவாறு. |
உதாரணம் : கஃறீது கற்றீது என வரும். |
புகரின்றென்றதனால் 'நெடியத னிறுதி' (எழு - 370) என்பதனுள் வேறீது வேற்றீது என்னும் உறழ்ச்சி முடிபுங் கொள்க. |
(74) |
370. | நெடியத னிறுதி யியல்புமா ருளவே. |
|
இஃது 'அல்வழி யெல்லா முறழ்' (எழு - 368) என்றதனை விலக்கி இயல்பாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : நெடியதன் இறுதி இயல்புமாருள - நெட்டெழுத்தின் ஈற்று லகார ஈறு குறியதன் இறுதிக்கண் நின்ற லகாரம்போலத் திரிந்து உறழ்தலேயன்றி இயல்பாய் முடிவனவும் உள என்றவாறு. |
|
1. அதனால் என்பது அத்தால் என நின்றதுபோலும். ஏனையவுமன்ன. |
2. அக்கால் - அப்பொழுது. இவற்றின் ஈறுகள் திரியும் என்றபடி. |