புள்ளிமயங்கியல்293

உதாரணம் : பால்கடிது சிறிது  தீது  பெரிது என வரும். இயல்பாகாது
திரிந்தன வேல்கடிது வேற்கடிது என்றாற் போல்வன. 
 

(75)
 

371.

நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லு
மல்லது கிளப்பினும் வேற்றுமை யியல.

 

இஃது    அல்வழிக்கண்   உறழ்ந்துமுடிக    என்றதனை   வேற்றுமை
முடிபென்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : நெல்லுஞ்    செல்லுங்   கொல்லுஞ்   சொல்லும் -
நெல்லென்னுஞ்  சொல்லுஞ்  செல்லென்னுஞ்  சொல்லுங்  கொல்லென்னுஞ்
சொல்லுஞ் சொல்லென்னுஞ் சொல்லுமாகிய இந் நான்கு சொல்லும், அல்லது
கிளப்பினும்  வேற்றுமை  இயல -  அல்வழியைச்  சொல்லுமிடத்துந்  தாம்
வேற்றுமை  முடிபின்  இயல்பிற்றாய்  லகரம்  றகரமாய்த்  திரிந்து முடியும்
என்றவாறு.
 

உம்மை சிறப்பு.
 

உதாரணம் : நெற்காய்த்தது  செற்கடிது  கொற்கடிது சொற்கடிது சிறிது
தீது பெரிது என வரும். 
 

(76)
 

372.

இல்லென் கிளவி யின்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலு மையிடை வருதலு
மியற்கை யாதலு மாகாரம் வருதலுங்
கொளத்தகு மரபி னாகிட னுடைத்தே.

 

இஃது  இவ்  வீற்று  வினைக்குறிப்புச்  சொல்லுள்  ஒன்றற்கு  எய்தாத
தெய்துவித்தது.
 

இதன் பொருள் :      இல்லென்கிளவி     இன்மைசெப்பின்     -
இல்லென்னுஞ்சொல்   இருப்பிடமாகிய    இல்லை   உணர்த்தாது    ஒரு
பொருளினது இல்லாமையை உணர்த்தும் இடத்து, வல்லெழுத்து மிகுதலும் -
வல்லெழுத்து முதன்மொழி வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடிதலும், ஐ
இடைவருதலும்  -  ஐகாரம்   இடையே   வருதலும்,   இயற்கையாதலும் -
இரண்டும் வாராது இயல்பாய் முடிதலும், ஆகாரம் வருதலும் - ஆகாரம்