உதாரணம் : அஃகடிய இஃகடிய உஃகடிய சிறிய தீய பெரிய என வரும். இவ்வழக்கு இக்காலத்து அரிது. |
(84) |
380. | மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும். |
|
இஃது எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத்தாகும் - அவ்வகர ஈறு மென்கணம்வந்து இயையுமாயின் அவ்வகரவொற்று அவ்வவ் மெல்லெழுத்தாய்த் திரிந்துமுடியும் என்றவாறு. |
உதாரணம் : அஞ்ஞாண் இஞ்ஞாண் உஞ்ஞாண் நூல் மணி என வரும். |
(85) |
381. | ஏனவை புணரி னியல்பென மொழிப. |
|
இதுவும் அது, அவ் வீறு ஏனைக் கணங்களோடு புணருமாறு கூறுதலின். |
இதன் பொருள் : ஏனவை புணரின் - அச்சுட்டுமுதல் வகர ஈற்றோடு இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணருமாயின், இயல்பென மொழிப - அவ்வகரந் திரியாது இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் : அவ்யாழ் இவ்யாழ் உவ்யாழ் வட்டு அடை ஆடை என ஒட்டுக. |
ஈண்டுக் கூறியது நிலைமொழிக்கென்றும் ஆண்டு 'நின்ற சொன்மு னியல்பாகும்' (எழு -144) என்றது வருமொழிக்கென்றும் உணர்க. |
(86) |
382. | ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே. |
|
இஃது எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : ஏனைவாரம் - 'வகரக் கிளவி நான்மொழியீற்றது' (எழு - 81) என்றதனுள் ஒழிந்துநின்ற உரிச்சொல்லாகிய வகரம் இருவழியும், தொழிற்பெயர் இயற்று - ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் |