385. | தமிழென் கிளவியு மதனோ ரற்றே. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : தமிழ் என் கிளவியும் - தமிழென்னுஞ் சொல்லும், அதனோரற்று - வல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி அக்குச்சாரியையும் பெற்று முடியும் என்றவாறு. |
அதனோரற்றே என்றதனால் இதற்குத் தமிழ்க்கூத்தென வல்லெழுத்த மிகுதலே வலியுடைத்து. |
உதாரணம் : தமிழக்கூத்து சேரி தோட்டம் பள்ளி என வரும். தமிழையுடைய கூத்து என விரிக்க. தமிழ்வரையர் என்றாற்போல வல்லெழுத்துப்பெறாது அக்குப் பெற்றன, 'உணரக்கூறிய' (எழு - 405) என்னும் புறனடையாற் கொள்க. தமிழநாடு தமிழ்நாடு என ஏனைக்கணத்து முடிபு 'எப்பெயர் முன்னரும்' (எழு - 128) என்பதனுள் 'முற்ற' என்றதனான் முடித்தாம். |
(90) |
386. | குமிழென் கிளவி மரப்பெய ராயிற் பீரென் கிளவியொ டோரியற் றாகும். |
|
இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்தும் அம்மும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் - குமிழென்னுஞ் சொற் குமிழ்த்தலென்னுந் தொழிலன்றி மரப்பெயராயின், பீர் என் கிளவியொடு ஓர் இயற்று ஆகும் - பீரென்னுஞ் சொல்லொடு ஓரியல்பிற்றாய் ஒருவழி மெல்லெழுத்தும் ஒருவழி அம்மும் பெற்றுமுடியும் என்றவாறு. |
உதாரணம் : குமிழ்ங்கோடு குமிழங்கோடு செதிள் தோல் பூ என வரும். |
ஓரியற்றென்றதனாற் பிறவற்றிற்கும் இம்முடிபு கொள்க. மகிழ்ங்கோடு மகிழங்கோடு என ஒட்டுக. |
(91) |