387. | பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே. |
|
இது வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப் பெறுக என்றலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வு - பாழென்னுஞ் சொல்லீறு வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப்பெற்று உறழ்ந்து முடியும் என்றவாறு. |
உதாரணம் : பாழ்க்கிணறு பாழ்ங்கிணறு சேரி தோட்டம் பாடி என ஒட்டுக. இது பாழுட்கிணறு என விரியும், பாழ்த்த கிணறு என வினைத்தொகை முடியாமையின். |
(92) |
388. | ஏழென் கிளவி யுருபிய னிலையும். |
|
இஃது எண்ணுப்பெயர் இவ்வாறு முடிக என்றலின் எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : ஏழ் ஏன் கிளவி - ஏழென்னும் எண்ணுப்பெயர் இறுதி, உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சிக்கட் கூறிய இயல்பின்கண்ணே நிலைபெற்று அன்பெற்று முடியும் என்றவாறு. |
அஃது 'அன்னென் சாரியை யேழ னிறுதி' (எழு - 194) என்பதாம். |
உதாரணம் : ஏழன்காயம் சுக்கு தோரை பயறு என வரும். இயைபு வல்லெழுத்து ஓத்தின் புறனடையான் வீழ்க்க. இஃது ஏழனாற் கொண்ட காயம் என விரியும். |
(93) |
389. | அளவு நிறையு மெண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலு முகரம் வருதலுங் கடிநிலை யின்றே யாசிரி யற்க. |
|
இது மேலதற்கு எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : அளவும் நிறையும் எண்ணும் வருவழி - அவ்வேழென்பதன்முன்னர் அளவுப்பெயரும் நிறைப் |